அம்பை அருகே மன்னார்கோவில் ராஜகோபாலசாமி கோவில் கும்பாபிஷேகம் விழா

மன்னார்கோவில் ராஜகோபாலசாமி கோவிலில் கடந்த 1-ந்தேதி விழா தொடங்கியது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்  நடைபெற்றபோது எடுத்த படம்.
கும்பாபிஷேகம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

வி.கே.புரம்:

அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் ராஜகோபாலசாமி குலசேகர ஆழ்வார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவில் ஆகும்.

இந்த கோவிலில் கடந்த 1-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று 5 மணிக்கு மேல் புண்யாகம், அக்னி கும்ப பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்று காலை 8 மணிக்கு மேல் ராஜகோபுர விமானம் மற்றும் பரிவாரங்கள் மூலமூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது.

மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான ஆன்மீக தொண்டர்கள் கலந்து கொண்டனர். அம்பை துணை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com