search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suthamalli"

    • சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி 2-ம் யாகசால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி கொடிமரத்து சுடலைமாடசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பிரம்மாச்சர்ய பூஜை, தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று சிறப்பு ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், கோ பூஜை, கன்னியாபூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, மாலையில் யாகசாலை பூஜை, சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 6.30 மணிக்கு 2-ம் யாகசால பூஜை, நாடிச்சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. 9 மணிக்கு கொடிமரத்து சுடலைமாட சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மகேஷ்வர பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடந்தது.

    • வேலியில் சிக்கிய நாய் பயத்தில் யாரையும் அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    நெல்லை

    நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள சீனிவாசர் நகர் பகுதியில் காலி மனைக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் நேற்று வளர்ப்பு நாய் ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியது.

    இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ரிச் ஹவுசிங் சேர்மன் கண்ணன் மற்றும் பேட்டை காமராஜர் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் நாயை மீட்க முயற்சி செய்தனர். நாய் பயத்தில் அவர்களை அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.

    இதுகுறித்து ரிச் ஹவுசிங் கண்ணன் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மைக்கேல்ராஜ், சந்தர், ஆறுமுகம், தங்கராஜா, செல்வரத்தினம், இசக்கி ஆகியோர் கம்பி வேலியில் சிக்கிய நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    • சுத்தமல்லியை சேர்ந்த கண்ணன் என்பவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
    • கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.

    நெல்லை:

    சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (வயது 44).இவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.

    இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் கீழ் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் கைது செய்து பாளை மத்திய சிறை அடைத்தார்.

    • மின்தடை குறித்து கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிககை வெளியிட்டு உள்ளார்.
    • மின்தடை காரணமாக 21-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக பிரிவு செயற்ெபாறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ( வியாழக்கிழமை) கரிசல் பட்டி, சேரன்மகாதேவி, மேலக்கல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கரிசல்பட்டி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு, பட்டன்காடு, இடை யன்குளம், கங்க ணாங்குளம், பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடைய மான்குளம், வெங்கட் ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேலும் சேரன்மகாதேவி துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபால சமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம்,கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை இருக்கும்.

    இதேபோல் மேலக்கல்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேலக்கல் லூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டாநகரம், நடுகல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக்கர்குளம், வெள்ளாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
    • 2 பேரின் உடலையும் உறவினர்கள் பெற்று சென்றனர்.

    நெல்லை:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 58). இவரது மகன்கள் மணிகண்டன்(25), சபரீஸ்வரன்(13).

    நெல்லையை அடுத்த சுத்தமல்லியில் மணிகண்டன் சாலையோர கடை அமைத்து வெங்காயம் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது மணிகண்டனுக்கும், அதே பகுதியில் பழக்கடை வைத்திருந்த சுப்பையாவின் மகன்களான சதீஷ்குமார், பார்த்தீபன் ஆகிய 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

    அவர்களுக்குள் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக மணிகண்டன், சபரீஸ்வரன் ஆகியோரை சகோதரர்களான சதீஷ்குமார், பார்த்தீபன் கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    அப்போது 2 பேரும், தங்களுக்கு தரவேண்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை தராததாலும், கஞ்சா வழக்கு ஒன்றில் போலீசாரிடம் தங்களை சிக்க வைத்ததாலும் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக அவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மணிகண்டனின் உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் மற்றும் பாளை தாசில்தார் ஆவுடையப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.6 லட்சம் வீதம் 2 பேருக்கும் ரூ.12 லட்சம் நிவாரணத்திற்கான காசோலையை தாசில்தார் ஆவுடையப்பன், மணிகண்டனின் பெற்றோரிடம் வழங்கினார். இதையடுத்து 2 பேரின் உடலையும் உறவினர்கள் பெற்று சென்றனர்.

    ×