என் மலர்
நீங்கள் தேடியது "Goondass act"
- சுத்தமல்லியை சேர்ந்த கண்ணன் என்பவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
- கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார்.
நெல்லை:
சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் கருத்தபாண்டி என்ற கண்ணன் (வயது 44).இவர் மீது திருட்டு, அடிதடி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
இதன் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி கண்ணன் மீது குண்டர் சட்டத்தில் கீழ் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன் குமார் கைது செய்து பாளை மத்திய சிறை அடைத்தார்.
- இட்டமொழியை சேர்ந்த கதிரேசன் (23) என்பவர் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தனர்.
நெல்லை:
கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் உலகுராஜ் (வயது 23), குமார் (20).
முன்னீர்பள்ளம் மேலச்செவல் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் முத்துராஜ் என்ற முத்து (42).
இவர்கள் 3 பேரும் அடி-தடி, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேபோல் திசையன்விளை அருகே இட்டமொழியை சேர்ந்த கதிரேசன் (23) என்பவர் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ள வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ் (21). என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரைத்தனர்.
அதன்பேரில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.சரவணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட 5 பேரையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.






