search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரி அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர்ஆய்வு - மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
    X

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்திய போது எடுத்த படம். 

    ஆறுமுகநேரி அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'திடீர்'ஆய்வு - மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்

    • திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறிவுறுத்தினார்

    ஆறுமுகநேரி:

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில் நம் பள்ளி நம் பெருமை என்ற ஆய்வுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்படி திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதியில் ஆறுமுகநேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்குள்ள 6-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 1 வகுப்பு மாணவி களிடம் பாடங்கள் தொடர்பான வினாக்களை கேட்டறிந்தார்.பின்னர் வகுப்பறைகள், சுற்றுச்சுவர் மற்றும் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை தனித்தனியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.மேலும் மாணவிகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வுடன் இருக்க ஆசிரியர்களை அறி வுறுத்தினார். மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் வசதிக்காக பள்ளியின் அருகில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்செல்வி, பள்ளித் தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஆதவா தொண்டு நிறு வன தலைவருமான பால குமரேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×