வாலிபருக்கு கத்திக்குத்து

மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார். பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் பகுதியில் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு தென்காசியை சேர்ந்த சுடலை முத்து என்பவரது மகன் கனி(வயது 21) என்பவர் கடந்த 4 மாதமாக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் தேவகோட்டையைச் சேர்ந்த முஸ்தபா என்பவரது மகன் அசாருதீன்(24) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அசாருதீனுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவியுடன் தொழிற்சாலை விடுதியில் தங்கி உள்ளார். அதன் அருகே உள்ள அறையில் கனி தங்கி உள்ளார். சம்பவத்தன்று அசாருதீனுக்கும் அவர் மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அவரது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனை அருகில் இருந்த கனி ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து கனியின் முகம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் குத்தியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

மற்ற தொழிலாளர்கள் ஓடிவந்து கனியை காப்பாற்றி பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com