என் மலர்tooltip icon

    உலகம்

    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் இளைஞர்கள் - மலேசிய அமைச்சர் சர்ச்சை பேச்சு
    X

    வேலை அழுத்தத்தால் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறும் இளைஞர்கள் - மலேசிய அமைச்சர் சர்ச்சை பேச்சு

    • அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
    • அமைச்சரின் கருத்து Misinformation என மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    வேலை அழுத்தத்தால் இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக மாறுவதாக மலேசிய அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    மலேசிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு அமைச்சர் சுல்கிஃப்லி ஹசன், "வேலையில் ஏற்படும் அழுத்தமும் சமூகத்தின் தாக்கமும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட LGBT சார்ந்த மனநிலைக்கு இளைஞர்கள் செல்ல முக்கிய காரணங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் இந்த கருத்துக்கு மலேசியாவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இதனை தவறான தகவல் என குறிப்பிட்டு மனித உரிமை ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×