என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பழக்கம்"

    • ராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு என்று கருதப்படாது.
    • தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது

    புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதத்திற்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மது அருந்துதல், புகையிலை அல்லது போதைப்பொருள் பயன்பாடு போன்ற தனிப்பட்ட, தேவையற்றப் பழக்கங்களால் ஏற்படும் நோய்களுக்கு ஊனமுற்ற ஓய்வூதியம் வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

    முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அரவிந்த் குமார் மற்றும் நீதிபதி பி.பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' (மூளையின் வலது பக்க தமனியில் ஏற்பட்ட இரத்த அடைப்பால் வந்த பக்கவாதம்) பாதிப்பு, ராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணிச் சூழலால் தீவிரமடைந்ததோ அல்ல என்று மருத்துவக் குழு அறிக்கை சமர்பித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்து, ஊனமுற்றோர் ஓய்வூதிய கோரிக்கையை நிராகரித்த ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதிசெய்தது.

    அவரது பக்கவாதத்திற்கு புகைபிடித்தலே காரணம் என்று மருத்துவக் குழு உறுதி செய்தது. அவர் ஒரு நாளைக்கு சுமார் 10 பீடிகள் புகைக்கும் பழக்கம் கொண்டவர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒரு ரத்த உறைவு அல்லது கொழுப்புப் படிவம் மூளைக்குச் செல்லும் தமனியை அடைக்கும்போது, ஆக்சிஜன் விநியோகத்தைத் தடுத்து இரத்த ஓட்டத்தைக் குறைப்பதன் மூலம் 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்' ஏற்படுகிறது என்றும், இதன் காரணமாக மூளைத் திசுக்கள் பாதிப்படைகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இதற்கான முக்கிய காரணிகளாக உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன் மற்றும் இதயத் துடிப்பு ஒழுங்கற்ற நிலை ஆகியவை இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து "முதல் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவக் குழுவின் கருத்துகளை நாங்கள் ஆய்வு செய்ததில், அவருக்கு ஏற்பட்ட 'Stroke Ischemic RT MCA TERRITORY' எனும் பாதிப்பானது இராணுவப் பணியால் ஏற்பட்டதோ அல்லது பணியின் காரணமாகத் தீவிரமடைந்ததோ அல்ல என்பதில் எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.

    மேல்முறையீடு செய்தவர் ஒரு நாளைக்கு பத்து பீடிகள் என்ற கணக்கில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர் என்பது இரண்டு அறிக்கைகளிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்," என்று நீதிமன்றம் கூறியது.

    இராணுவ ஓய்வூதிய விதிகள் 1961 மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல் 2002 ஆகியவற்றின் அடிப்படையில், புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் பக்கவாதம் "பணி நிமித்தமான பாதிப்பு" (Attributable to service) என்று கருதப்படாது. 

    • ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு CPR செய்தும் பலனில்லாமல் போனது.
    • சான் பிரான்சிஸ்கோ போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

    ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டாமி லீ ஜோன்ஸ். மென் இன் பிளாக் படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்றார்.

    இந்நிலையில் இவரது மகளும் நடிகையுமான விக்டோரியா ஜோன்ஸ் (34), சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

    சான் பிரான்சிஸ்கோவின் நோப் ஹில் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஃபேர்மாண்ட் ஓட்டலின் 14-வது மாடியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை விக்டோரியா ஜோன்ஸ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    ஓட்டல் ஊழியர்கள் அவருக்கு CPR செய்தும் பலனில்லாமல் போனது. தகவலறிந்து அங்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சான் பிரான்சிஸ்கோ போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த மரணத்தில் எந்தவித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது.

    மருத்துவப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

    போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை உள்ளிட்ட வழக்குகளில் கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை விக்டோரியா கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான தனது மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது,

    ஷாஜகான்பூரில் தில்ஹர் நகரில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஓம்கார் கங்வார் (67). இவரது மகன் ஹர்ஷ்வர்தன் கங்வார் (32) போதைக்கு அடிமையானவர் ஆவார்.

    திங்கட்கிழமை இரவு, ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சுத்தியலால் அவரைத் தாக்க முற்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோபத்தில் இருந்த தந்தை ஓம்கார் நேற்று(செவ்வாய்க்கிழமை), துப்பாக்கியை காட்டி மகனை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஓம்கார் மகன் ஹர்ஷ்வர்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தை ஓம்காரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

    • இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார்
    • 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் வசித்து வந்தவர் ஆர்த்தி தேவி. இவரது கணவர் ராம் மிலன் சென்னையில் உள்ள பாபா அணுசக்தி நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். மூத்த மகள் வேறு ஒரு நகரில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எனவே தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல நேரமாகிறது என தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த மகன் தாயை கீழே தள்ளி விட்டதில் அவரது தலையில் பலமாக அடிபட்டுள்ளது. காயம் காரணமாக தாய் ஆர்த்தி தேவி அங்கேயே உயிரிழந்தார். இதனால் பதற்றம் அடைந்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளான்.

    தொடர்ந்து வீட்டில் சிசிடிவி இணைப்பை துண்டித்து வீட்டை வெளியில் இருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளான். சென்னையில் உள்ள ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.

    இடைப்பட்ட நேரத்தில் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கிய நிலையில் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளான். இருப்பினும் 5வது நாள் அமன் வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கோவிலில் சென்று அமர்ந்துள்ளான். தந்தை ராம் மிலன் தனது அண்ணியை அழைத்து வீட்டில் சென்று பார்க்க சொல்லியுள்ளார்.

    அதன்படி அவர் வந்து பார்த்த போது வீடு உள்ளே இருந்து போடப்பட்டிருந்தது. மேலும் துர்நாற்றம் வந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து உடனே கிளம்பி வந்த ராம் மிலன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.

     

    இதுதொடர்பாக போலீசுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் பக்கத்தில் இருந்த கோவிலில் இருந்த அமனும் கண்டுபிடிக்கப்பட்டான்.தனது தாய் கீழே விழுந்ததில் இறந்ததாகவும் பயத்தில் தான் 4 நாட்களாக வெளியே சுற்றித் திரிந்ததாகவும் கூறியுள்ளார். 

     ஆனால் வீட்டில் ரத்தக் கரை இரண்டு இடங்களில் இருந்த நிலையில் ஆர்த்தி தேவி உடல் இழுத்துச் செல்லப்பட்டதை போலீஸ் உணர்ந்தது. மேலும் அமன் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவன் என அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பள்ளியிலும் அமன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்துள்ளது.

    தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்கு செல்லுமாறு கூறியதாகவும் இதற்கு அமன் மறுத்ததால், அமன் அதிக பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டு, தாய் விரக்தியில் பணத்தை தன் மீது தூக்கியெறிந்தார் எறிந்தார், எனவே அவரை தான் கீழே தள்ளி விட்டதாக அமன் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அம சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அமனை அனுப்பி வைத்தனர்.

    • நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும். அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
    • மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மற்றும் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மகளிர் கலைக்கல்லூரி இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி மணிகூண்டு பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அனிதாராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன்வசந்த்ஜாபேஸ், டி.எஸ்.பி லாமெக், இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், கல்லூரி முதல்வர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா கொடியசைத்து துவக்கி வைத்தார். 2000 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே பள்ளியை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் நிஷை, நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகமாக உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும், தங்கள் வீடுகளை சேர்ந்தவர்களையும் சுற்றத்தாரையும் போதைப்பொருளிருந்து விடுவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.இதில் பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள், கல்லூரி பேராசிரியைகள் பங்கேற்றனர்.

    ×