என் மலர்tooltip icon

    இந்தியா

    போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை சுட்டுக் கொன்ற தந்தை.. உ.பி.யில் அதிர்ச்சி
    X

    போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனை சுட்டுக் கொன்ற தந்தை.. உ.பி.யில் அதிர்ச்சி

    • ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான தனது மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது,

    ஷாஜகான்பூரில் தில்ஹர் நகரில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஓம்கார் கங்வார் (67). இவரது மகன் ஹர்ஷ்வர்தன் கங்வார் (32) போதைக்கு அடிமையானவர் ஆவார்.

    திங்கட்கிழமை இரவு, ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சுத்தியலால் அவரைத் தாக்க முற்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோபத்தில் இருந்த தந்தை ஓம்கார் நேற்று(செவ்வாய்க்கிழமை), துப்பாக்கியை காட்டி மகனை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஓம்கார் மகன் ஹர்ஷ்வர்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தை ஓம்காரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×