என் மலர்
நீங்கள் தேடியது "Homicide"
- கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
- மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று அன்சல் கூறினார்.
மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிராவின் நானந்த் பகுதியை சேர்ந்த 20 வயது சக்ஷம் டேட் மற்றும் அன்சல் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.
எதிர்ப்பை மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அன்சல் அவர் வீட்டிற்குச் சென்றார்.
அவர் சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த காதலனை திருமணம் செய்து கொண்டார்.
அப்போது, சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று கூறிய அன்சல், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.
கொலை வழக்கில் அன்சல் உடைய தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் காஹ்னி கிராமத்தை சேர்ந்த 23 வயதான ஆட்டோ ஓட்டுநர் சூரஜை, சப்னா (23 வயது) தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்தார்.
இந்த தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார். இதுநாள் வரை காஹ்னி கிராமத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த தம்பதி அண்மையில் மீண்டும் கிராமத்திற்கு திரும்பினர்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 9:40 மணியளவில், சப்னாவின் சகோதரர் சஞ்சு மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தம்பதியின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் வீட்டில் தூங்கிகொண்டிட்ருந்த்த சப்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூரஜின் சகோதரர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். தாக்குதல் நடந்த நேரத்தில் சூரஜ் வீட்டில் இல்லாததால் உயிர்த்தப்பினார்.
அங்கிருந்து தப்பிய கும்பல் அன்றைய இரவே சூரஜையும், லடோத்-போஹர் சாலையில் வைத்து கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவரை வழிமறிக்கத் தயாராகி வருவதாகவும் கிடைத்த தகவலை அடுத்து, போலீசார் அங்கு சென்றனர்.
அங்கு வந்த குற்றவாளிகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், நான்கு குற்றவாளிகளும் காயமடைந்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக ரோஹ்தக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டார்.
- பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.
இந்நிலையில் கணவன்-மனைவியை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். மே 2025ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில் , பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.
- ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.
- அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் போதைக்கு அடிமையான தனது மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது,
ஷாஜகான்பூரில் தில்ஹர் நகரில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற கணக்காளர் ஓம்கார் கங்வார் (67). இவரது மகன் ஹர்ஷ்வர்தன் கங்வார் (32) போதைக்கு அடிமையானவர் ஆவார்.
திங்கட்கிழமை இரவு, ஹர்ஷ்வர்தன் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், பின்னர் சுத்தியலால் அவரைத் தாக்க முற்பட்டதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோபத்தில் இருந்த தந்தை ஓம்கார் நேற்று(செவ்வாய்க்கிழமை), துப்பாக்கியை காட்டி மகனை மிரட்டியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் ஓம்கார் மகன் ஹர்ஷ்வர்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
அக்கம்பக்கத்தினர் ஹர்ஷ்வர்தனை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தந்தை ஓம்காரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது
- ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் காசி இவருடைய மகன் சுப்பிரமணி இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். பெத்தானூர் கிராமத்தில் சுப்பிரமணி புதிதாக வீடு கட்டி வருவதாக கூறப்படுகிறது. வீட்டின் பணி 80 சதவீதம் முடிந்த நிலையில் அந்த வீட்டிற்கு ஒயரிங் வேலை செய்வதற்கு அதே பகுதியில் வசிக்கும் அஜித் வயது 28 என்ற இளைஞர் வீட்டு உரிமையாளரை அணுகி உள்ளார். அப்பொழுது வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணி அஜித் ஒயரிங் வேலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் சுப்பிரமணி வீட்டிற்கு குடிபோதையில் சென்றுள்ளார். அப்பொழுது வீட்டில் இருந்த சுப்பிரமணியின் மனைவி ராணியிடம் உன் வீட்டுக்காரன் எங்கே அவனை இங்கே வர சொல்லு எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் ராணி என் கணவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார். பின்பு ராணியை கீழே தள்ளி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. ராணி வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த மளிகை கடைக்கு தப்பித்து ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த சுப்பிரமணியிடம் ராணி நடந்த விஷயத்தை கூறியுள்ளார். பின்னர் அஜித்திடம் என் மனைவியை எதற்காக அடித்தார் என கேட்ட சுப்பிரமணியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இச் சம்பவத்தால் ராணிக்கு காயம் ஏற்பட்டது இதனால் ஆட்டோவின் மூலம் கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்பு சின்னசேலம் காவல் நிலையத்தில் நேற்று ராணி புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்த விசாரணை கொண்டு வருகின்றனர்.
- வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.
- வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அக்னி திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.இந்நிலையில் கோவில் நிகழ்ச்சிக்காக அப் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இப்பொழு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக பேனர் வைப்பதற்காக ஒருவர் பேனரை கழற்சி அதே பகுதியில் நடுத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணனிடம் (19,) கொடுத்துள்ளார். அதை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் பேனரை ஏன் கிழித்து இங்கு வைத்துள்ளாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு ள்ளார். இந்த தாக்குதல் குறித்து ராமநத்தம் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தில் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 38). இவர் இன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் ஆவின் அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த 2 பேர் வெங்கடேசனை வழிமறித்து தாக்கினர்.இந்த திடீர் தாக்குதலால் நிலை குலைந்த வெங்க டேசன் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை விடாமல் துரத்திய மர்மநபர்கள், வெங்கடேசனை வழி மறித்து தலையில் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் வெங்கடேசன் கீழே விழுந்தார்.தகவல் அறிந்த விழுப்புரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயத்துடன் சாலையில் கிடந்த வெங்கடேசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த நபர்கள் வெங்கடேன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் சாலை யில் சென்றவரை வழி மறித்து கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
- இந்த கொலை வழக்கு 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
- உணர்ச்சி வசத்தால் கொலை நடந்துள்ளது என்றார் நீதிபதி
கடந்த 2009 ஆகஸ்ட் 16 அன்று அல்மந்தா என்பவருக்கு தன் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் அல்மந்தாவின் மனவி, அவரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த அல்மந்தா, தனது மனைவியை கத்தியால் குத்தினார். இதனையடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், 14 ஆண்டுகளாக நடைபெறும் அந்த வழக்கு இன்று டெல்லியில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நவ்ஜீத் புதிராஜா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர் கூறியதாவது:
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. மனைவி கணவனை தாக்கி உள்ளார். இதில் கோபமடைந்த போதுதான் கணவன் கத்தியால் அவரை குத்தியுள்ளார்; அதில் மனைவி உயிரிழந்து விட்டார். எனவே இதில் "முன்கூட்டியே திட்டமிடல்" (premeditation) என்பது பொருந்தாது. சூழ்நிலையை சாதகமாக்கி கொலை முயற்சியில் இறங்குவதையும் கணவன் செய்யவில்லை. கொடுமையாகவோ அல்லது குரூரமாகவோ தாக்குதலில் ஈடுபடவுமில்லை. ஆனால், தனது தாக்குதலால் மனைவி இறக்க நேரிடும் என்பதை அறிந்திருந்தார்.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தியில் ரத்த கறை இருந்திருக்கிறது. அதை அழிக்க கணவன் முயற்சி செய்யவில்லை.
சண்டையில் உணர்ச்சி பெருக்கெடுத்து இந்த கொலை நடந்துள்ளது. கொலை செய்யும் எண்ணம் முன்னரே இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.
கணவன் மீதும் காயங்கள் இருந்துள்ளது. தன் மீது ஏற்பட்ட தாக்குதலால் "திடீர்" என ஏற்பட்ட ஆத்திரத்தில் மனைவியை பதிலுக்கு தாக்கி உள்ளார். எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302 பிரிவு இங்கு பொருந்தாது. அதற்கு பதில் 304 பாகம் 1 பிரிவில்தான் அவர் குற்றவாளி ஆகிறார்.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
- மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
- 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).
மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.
10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.
ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.







