என் மலர்tooltip icon

    இந்தியா

    வேறு சாதி என்பதால் காதலனை கொன்ற தந்தை.. சடலத்துடன் திருமணம் செய்த காதலி
    X

    வேறு சாதி என்பதால் காதலனை கொன்ற தந்தை.. சடலத்துடன் திருமணம் செய்த காதலி

    • கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
    • மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று அன்சல் கூறினார்.

    மகாராஷ்டிராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட காதலனின் சடலத்துடன் காதலி திருமணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் நானந்த் பகுதியை சேர்ந்த 20 வயது சக்ஷம் டேட் மற்றும் அன்சல் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அன்சலின் குடும்பத்தினர் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்தனர்.

    எதிர்ப்பை மீறி சக்ஷமைத் திருமணம் செய்துகொள்ள அன்சல் முடிவெடுத்ததை அறிந்த அவரது தந்தையும் சகோதரர்களும், வியாழக்கிழமையன்று சக்ஷமைக் கடுமையாகத் தாக்கி, துப்பாக்கியால் தலையில் சுட்டு, பின்னர் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்தனர்.

    சக்ஷமின் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருந்தபோது, அன்சல் அவர் வீட்டிற்குச் சென்றார்.

    அவர் சக்ஷமின் உடலுக்கு மஞ்சள் பூசி, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு இறந்த காதலனை திருமணம் செய்து கொண்டார்.

    அப்போது, சக்ஷமின் மரணத்திலும் எங்கள் காதல் வென்றது; என் தந்தையும் சகோதரர்களும் தோற்றனர் என்று கூறிய அன்சல், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    மேலும் சக்ஷமின் வீட்டிலேயே மருமகளாகத் தன் வாழ்நாள் முழுவதும் வாழப்போவதாகவும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

    கொலை வழக்கில் அன்சல் உடைய தந்தை, சகோதரர்கள் உள்ளிட்ட 6 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×