திட்டக்குடி அருகே பேனரை கழற்றியதாக வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்

வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டனர்.
திட்டக்குடி அருகே பேனரை கழற்றியதாக வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல்
Published on: 

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ம.புடையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அக்னி திருவிழா முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகிறது.இந்நிலையில் கோவில் நிகழ்ச்சிக்காக அப் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இப்பொழு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக பேனர் வைப்பதற்காக ஒருவர் பேனரை கழற்சி அதே பகுதியில் நடுத்தெருவில் வசிக்கும் பாஸ்கர் மகன் சரவணனிடம் (19,) கொடுத்துள்ளார். அதை கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் பேனரை ஏன் கிழித்து இங்கு வைத்துள்ளாய் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து சரவணனை ஆயுதங்களுடன் கடுமை யாக தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் அடைந்த சரவணன் அலறல் சத்தம் கேட்டுஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு ள்ளார். இந்த தாக்குதல் குறித்து ராமநத்தம் போலீ சார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தில் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com