என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol intoxication"

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • குவைத்தில் விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
    • இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    குவைத்:

    குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட 63 பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி 13 பேர் பலியானார்கள்.

    மற்ற அனைவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது என்றும், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார்.
    • ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (25). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மது அருந்தும் பழக்கம் உடையவர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த ஆனந்த் சாப்பிட்டு விட்டு மீண்டும் மது அருந்தியுள்ளார். பின்னர் நள்ளிரவில் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார்.

    இதனால் மயக்கமடைந்த ஆனந்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×