என் மலர்
நீங்கள் தேடியது "வளர்ப்பு தந்தை"
- வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
- தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது
- ஆத்திரமடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
- இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே பள்ளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 36). பூங்கொடியின் அண்ணன் சாமிநாதன் (38).
இவர் திருப்பூரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திரும ணமாகி 2 மகன்களுடன் இருந்த வளர்மதி என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு காந்தி நகரில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் வளர்மதி மற்றும் அவருடைய மூத்த மகன் ராகுல் (24). ஆகியோர் சம்பவத்தன்று சென்னி மலை அருகே காந்தி நகர் வீட்டுக்கு வந்து சாமிநாத னிடம், அவருடைய பெயரில் உள்ள சொத்தை எங்கள் பெயருக்கு எழுதி தாருங்கள் என கேட்டு தகராறு செய்த தாக கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சாமிநாதனின் தங்கை பூங்கொடி, அவருடைய கணவர் சரவணன், சாமிநாதன் வீட்டுக்கு சென்று தகராறு குறித்து கேட்டனர்.
இதில் அவர்களு க்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திர மடைந்த ராகுல், பூங்கொடி மற்றும் அவரது கணவர் சரவணனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வந்த சாமி நாதனை ராகுல் சரமாரி யாக கத்தியால் குத்தினார்.
இதில் காயமடைந்த 3 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ராகுலை கைது செய்தனர்.






