என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stepfather"

    • வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
    • தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.

    மலேசியாவில் தனது 2 வளர்ப்பு மகள்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு பெண்களும் 2020 ஆம் ஆண்டு முதல் வளர்ப்பு தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கடந்த மாதம் தங்களது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து தாயார் அளித்த புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை உடனடியாக கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 35 வயது நபருக்கு, 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 பிரம்படி தண்டனைகள் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது 

    எல்சால்வேடர் நாட்டில் வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #ImeldaCortez
    எல்சால்வேடர்:

    எல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார்.

    தொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு வந்த போலீசார் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கோர்டெஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே ஒரு வாரம் சிகிச்சை பெற்ற அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரல் நடந்தது.

    தற்போது இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது வளர்ப்பு தந்தை குறித்து கோர்டெஸ் கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் பொய் என மறுக்கப்பட்டது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் அனைத்தும் வளர்ப்பு தந்தைக்கு எதிராகவே உள்ளது.

    இருந்தாலும் தனது கருவை கலைக்க முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.#ImeldaCortez
    ×