என் மலர்
விளையாட்டு

வெறுப்பை வென்ற ஹாக்கி விளையாட்டு.... ஹைபை செய்துகொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்
- லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தனர்.
- ஆசிய கோப்பையில் இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர்
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியா பாகிஸ்தான் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதனால் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் உடன் இந்திய அணி வீரர்கள் விளையாட மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி பேசுபொருளானது.
இதனையடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி விரும்பாததால் இப்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டிலும் பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணி வீராங்கனைகள் கைகுலுக்க மறுத்தனர்.
இந்நிலையில், ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஹைபை கொடுத்துக்கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மலேசியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 21 வயதிற்குட்பட்ட சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டி 3-3 என்ற கணக்கில் டிரா ஆனது.






