என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுக்கு பின் தகுதிபெற்றது இந்திய மகளிர் அணி
    X

    ஜூனியர் ஆசிய கோப்பை கால்பந்து: 20 ஆண்டுக்கு பின் தகுதிபெற்றது இந்திய மகளிர் அணி

    • ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
    • இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் மோதியது.

    யாங்கோன்:

    ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

    இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில், மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது.

    இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

    இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது.

    அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.

    இந்திய அணி கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன்பிறகு 20 ஆண்டு கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×