என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் ஆசிய கோப்பை: அபிக்யான் குண்டு அதிரடி இரட்டை சதம்-அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
- முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 408 ரன்களைக் குவித்தது.
- அந்த அணியின் அபிக்யான் குண்டு இரட்டை சதமடித்து அசத்தினார்.
துபாய்:
12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
'ஏ' பிரிவில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியா உடன் மோதியது. டாஸ் வென்ற மலேசியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 408 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக அபிக்யான் குண்டு சிக்சர், பவுண்டரிகளாக விளாசி 209 ரன்கள் குவித்தார்.
மலேசியா சார்பில் முகமது அக்ரம் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 409 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மலேசிய அணி விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இறுதியில், 32.1 ஓவரில் மலேசிய அணி 93 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகனாக அபிக்யான் குண்டு தேர்வு செய்யப்பட்டார்.






