என் மலர்
உலகம்

இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது
- பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொழும்பு:
இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.
பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.
Next Story






