என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டக்ளஸ் தேவானந்தா"

    • பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொழும்பு:

    இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது.

    பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

    • இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரிக்க வேண்டும் என கூறினார்.
    • இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்றார்.

    கொழும்பு:

    இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது. பாஸ் நடைமுறையும் இல்லை.

    தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளைப் பார்த்துவிட்டு செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என தெரிவித்தார்.

    • இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்றார் இலங்கை மந்திரி.

    கொழும்பு:

    இந்தியாவுக்கு கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    இலங்கையில் இழுவைமடி மீன் பிடி படகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் இழுவை மீன்பிடி படகுகளை வைத்து இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது.

    இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சேதப்படுத்தப்படுகின்றன.

    இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது.

    கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும் என தெரிவித்தார்.

    ×