என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆட்ட நாயகன் விருது வென்ற முசராபானி: டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்து அசத்தல்
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 169 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
டி20 உலகக் கோப்பை தொடரின் 19வது லீக் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது.பிரியன் பென்னட் அரை சதம் கடந்தார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிளெஸ்ஸிங் முசராபானி 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டி20 உலகக் கோப்பையின் இரு போட்டிகளிலும் முசராபானி ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார்.
இந்நிலையில், முசராபானி ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
Next Story






