என் மலர்
கிரிக்கெட் (Cricket)

முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா ஜிம்பாப்வே: இலங்கைக்கு 147 ரன்கள் இலக்கு
- டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, இலங்கை அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்தது.கேப்டன் சிக்கந்தர் ராசா 37 ரன்னில் அவுட்டானார். பிரியன் பென்னட் 34 ரன்னில் வெளியேறினார்.
ரியான் பர்ல் 26 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்சனா, வஹிந்து ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை விளையாடி வருகிறது. இதில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
மாறாக, இலங்கை அணி வெற்றி பெற்றால் நாளை பாகிஸ்தானுடனான போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே முன்னேறியுள்ளது.






