என் மலர்
இந்தியா

கொல்லத்தில் நண்பர்களுடன் விளையாடச் சென்ற சிறுவனுக்கு சூடுவைத்த தந்தை கைது
- காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
- போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் பதானபுரம் பகுதியை சேர்ந்தவர் வின்சு குமார். இவருக்கு 11 வயதில் மகன் இருக்கிறான். சம்பவத்தன்று அவன் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றுள்ளான். விளையாடிவிட்டு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறான்.
இதனால் ஆத்திரமடைந்த வின்சுகுமார், நண்பர்களுடன் விளையாடச் சென்றது குறித்து கேட்டு தனது மகனை கண்டித்துள்ளார். மேலும் கம்பியை சூடாக்கி, மகனின் தொடை மற்றும் கால்களில் சூடு வைத்தார். இதில் காயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக பத்தனாபுரததில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
இதுகுறித்து சிறுவனின் தாய், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனது தாயிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனின் தந்தை வின்சு குமாரை கைது செய்தனர்.
Next Story






