என் மலர்
நீங்கள் தேடியது "toxic gas leak"
- வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.
- சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும்.
நைஜீரியாவின் பிளாட் டியூ மாகாணத்தில் உள்ள வேஸ் பகுதியில் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிகாலையில் தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காா்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு வாயு கசிந்தது. வாயு கசிவால் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 38 தொழிலாளா்கள் பரிதாபமாக உயிரிழந்தனா்.
மேலும், படுகாயமடைந்த 27 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
நைஜீரியாவில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி சட்டவிரோதமாக செயல்படும் இதுபோன்ற சுரங்கங்களில் விபத்துகள் ஏற்படுவது தொடா்கதையாகி வருகிறது. இதனால் அந்நாட்டில் சட்ட விரோதமாக செயல்படும் சுரங்கங்களை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
- 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகபா துறைமுகத்தில் மதியம் 3.15 மணிக்கு குளோரின் டாங்க் விழுந்து வெடித்தது. இதனால் வாயு கசிவு ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் 199 பேர் ரசாயான பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியால், துறைமுகத்திற்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் உள்ள அகபா நகரவாசிகள் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி உள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, அகபாவின் தெற்கு கடற்கறையில் இருந்து பொதுமக்கள் வெறியேற்றினர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு துறை சிறப்பு குழுக்கள் துறைமுகத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







