என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் விஷவாயு தாக்கி வடமாநில இளைஞர்கள் 4 பேர் பலி
  X

  திருப்பூரில் விஷவாயு தாக்கி வடமாநில இளைஞர்கள் 4 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் விஷவாயு தாக்கியதில் வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். #Tirupur #ToxicGas
  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டம் கருப்ப கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலை ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. 

  கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது, திடீரென விஷவாயு தாக்கியதில் பணியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  விசாரணையில், விஷவாயு தாக்கி இறந்தவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த தில்வார் உசேன், பரூக் அகமது, அன்வர் உசேன், அபு ஆகியோர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tirupur #ToxicGas
  Next Story
  ×