search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    X
    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்ற காட்சி. 

    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

    • துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
    • திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழலைச் செல்வங்கள் தங்களது இனிமையானக் குரலில் பாடல் பாடியும், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்தனர். மேலும் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்களை இறைவன் எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து மழலைச் செல்வங்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×