என் மலர்
விளையாட்டு

பிரான்ஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
- பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாரிஸ்:
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, இந்தோனேசியாவின் ரஹமத் ஹிதயத்-முகமது ரியான் அர்டியாண்டோ ஜோடி உடன் மோதியது.
இதில் அதிரடியாக ஆடிய இந்தோனேசிய ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
Next Story






