என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "newzealand"

    • இலங்கை அணியை 145 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • ஆனால் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 207 ரன்கள் எடுத்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 50-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. பர்ஹான் அதிரடியாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். பகர் சமான் 84 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கேப்டன் தசுன் ஷனகா கடைசி கட்டத்தில் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 31 பந்தில் 8 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 76 ரன்கள் குவித்து போராடினார். பவன் ரத்நாயகே அரை சதம் கடந்து 58 ரன்கள் எடுத்தார். போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    இந்நிலையில், ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது.
    • ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. குரூப் 2 பிரிவில் போட்டியை நடத்தும் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது. 2-வதாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழையும். நியூசிலாந்து 3 புள்ளியுடனும், பாகிஸ்தான் ஒரு புள்ளியுடனும் உள்ளன.

    கொழும்பில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி நிகழ்ந்தால் பாகிஸ்தான்-இலங்கை இடையே 28-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தான்-இலங்கை இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் 3 புள்ளியுடன் சமநிலை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

    தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானை விட நியூசிலாந்து ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹாரிக் புரூக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் 30 போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 17-ல், நியூசிலாந்து 10-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லை.

    • ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
    • 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மர்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் கனடாவை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தோற் கடித்தது. 2-வது சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

    இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து- ஓமன் (கொழும்பு, காலை 11 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (கொல்காத்தா, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    அயர்லாந்து, ஓமன் அணிகள் முதல் 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது நியூசிலாந்து அணி.
    • ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

    சென்னை:

    சென்னையில் நேற்று நடந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரக அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ. அணி 20 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய சேசிங் செய்த நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 175 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

    தொடக்க வீரர்களான பின் ஆலன், டிம் செய்பர்ட் ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப அமைத்து, உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அமைத்த ஜோடி என்ற வரலாற்று சாதனையை ஏற்படுத்தியது.

    உலகக் கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அணி என்ற சாதனையை நியூசிலாந்து அணி ஏற்படுத்தியது.

    இந்தப் பட்டியலில், இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோஸ் பட்லர் ஜோடி 170* ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்காவின் ரிலீ ரோசோவ் மற்றும் குயிண்டன் டி காக் ஜோடி 168 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இலங்கையின்

    குமார் சங்கக்காரா, மகேல ஜெயவர்த்தனே ஜோடி 166 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் , மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி.



    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் சதமடித்து அசத்தினார்.

    இந்தூர்:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 326 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக ஆடி 83 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உள்பட 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கேப்டன் சோபி டிவைன் தனி ஆளாகப் போராடி சதமடித்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து அணி 43.2 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

    இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லீக் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

     

    இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி, இவை அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தற்போது 1.923 ஆக இருக்கிறது.

    மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 1.821 ஆக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இவைகளின் நெட் ரன் ரேட் முறையே 1.385 மற்றும் -0.137 ஆக இருக்கிறது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை போல்ட் 17 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
    • நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, தனது முதல் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. எனவே அந்த அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை.

    இதையடுத்து, நியூசிலாந்து அணி 3-வது ஆட்டத்தில் உகாண்டா அணியுடன் இன்று மோதியது. இதில் உகாண்டா அணியை 40 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து இலக்கை வெறும் 5.2 ஓவர்களிலேயே கடந்து வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக சவுதி 3 விக்கெட்டும், போல்ட், சாண்ட்னர் மற்றும் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், போட்டி முடிந்ததும் பேட்டி அளித்த நியூசிலாந்து முன்னணி வீரரான டிரெண்ட் போல்ட், இதுவே தனது கடைசி டி20 உலகக் கோப்பை என அதிரடியாக அறிவித்தார்.

    எதிர் வரும் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான ஆட்டமே போல்ட்டின் கேரியரில் கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 17 ஆட்டங்களில் விளையாடியுள்ள போல்ட் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். நடப்பு தொடரிலும் நியூசிலாந்து சார்பில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றியது.
    • டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்துக்கு சரிந்தது.

    துபாய்:

    இலங்கை, நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை 3-வது இடத்தில் உள்ளது.

    டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நியூசிலாந்து 3 இடங்கள் சரிந்து 7-வது இடத்திற்கு சென்றது.

    இங்கிலாந்து 4-வது இடத்திலும், வங்கதேசம் 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன.

    நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    ×