மகளிர் டி20 கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

முதலில் ஆடிய இலங்கை அணி 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய நியூசிலாந்து 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மகளிர் டி20 கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி
Published on

கிறிஸ்ட்சர்ச்:

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என கைப்பற்றியது.

இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் மனுடி நனயக்கரா 35 ரன்னும், சமாரி அத்தபத்து 23 ரன்னும், நிலாக்ஷி டி சில்வா 20 ரன்னும் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில் ப்ரீ ல்லிங், ஜெஸ் கெர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க வீராங்கனை சுசி பேட்ஸ் 47 ரன் எடுத்து அவுட்டானார்.

பொறுப்புடன் ஆடிய புரூக் ஹாலிடே 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com