search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு- ரஷியா தகவல்
    X

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்

    இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு- ரஷியா தகவல்

    • எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
    • நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

    (ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

    நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×