என் மலர்

  நீங்கள் தேடியது "Indian Origin Man"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிங்கப்பூரில் தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், காதலியை தாக்கிய இந்தியருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
  சிங்கப்பூர்:

  சிங்கப்பூர்வாழ் இந்தியர் முகமது முஸ்தபா அலி (வயது 24). இவருக்கும், சாகிக்கா நதியா என்ற பெண்ணுக்கும் இடையே காதல். ஆனால் நதியா, முன்பு இன்னொருவரை காதலித்து உள்ளார்.

  இந்த நிலையில் நதியாவின் முதல் காதல் தொடர்பாக அவருக்கும், முகமது முஸ்தபா அலிக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு, ஜூன் மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த முகமது முஸ்தபா அலி, கர்ப்பமாக இருந்த தனது காதலியை முதுகிலும், தொடையிலும் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தினார்.

  இது தொடர்பான புகாரின்பேரில் முகமது முஸ்தபா அலி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

  அந்த வழக்கை சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டு நீதிபதி மேத்யூ ஜோசப் விசாரித்தார். விசாரணை முடிவில், முகமது முஸ்தபா அலி குற்றவாளி என கண்டார். தன் காதலி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்தும், அவரை முகமது முஸ்தபா அலி தாக்கியது மிக மோசமான செயல் என விமர்சித்த நீதிபதி அவருக்கு 10 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திய இந்திய வம்சாவளி கணவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. #Indianoriginman #7yearsjailed #stabbingpregnantwife #stabbingwife
  சிங்கப்பூர்:

  சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளி நபரான ஜெயசீலன் சந்திரசேகர்(30) என்பவர் விலைமாதாக முன்னர் தொழில் செய்துவந்த மயூரி(27) என்பவரை விரும்பி கடந்த 2013-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

  திருமணத்துக்கு பின்னர் கணவருக்கு ஒழுக்கமான மனைவியாக வாழ்ந்துவந்த மயூரி, கடந்த ஆண்டில் தனது முன்னாள் காதலரும், விபச்சார தரகருமான ஒருவருடன் மீண்டும் நட்பை புதுப்பித்து வந்ததாக நம்பிய ஜெயசீலன் சந்திரசேகர், தனது மனைவி வீட்டைவிட்டு வெளியே செல்ல தடை விதித்தார்.

  மேலும், சந்தேக கண்ணோட்டத்துடன் மயூரியை பார்க்க தொடங்கியதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, சச்சரவு வலுத்து வந்தது. இதற்கிடையில், மயூரி கருத்தரித்தார். அவரது வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார்? என்பது தொடர்பாக மேலும் தகராறு அதிகரித்தது.

  கணவரின் கொடுமையை தாங்க முடியாத மயூரி, வீட்டைவிட்டு வெளியேறினார். முன்னர், தன்னுடன் விபசார தொழிலில் ஈடுபட்டிருந்த தோழிகள் வீட்டில் தஞ்சமடைந்தார்.

  இதனால், ஆத்திரமடைந்த ஜெயசீலன் சந்திரசேகர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி மயூரியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொல்ல முயன்றார். வயிறு மற்றும் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மயூரியின் வயிற்றில் வளரும் குழந்தை இந்த தாக்குதலில் காயமடையாமல் தப்பியது.

  இந்த சம்பவம் தொடர்பாக ஜெயசீலன் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பாளித்தார். #Indianoriginman #7yearsjailed  #stabbingpregnantwife  #stabbingwife
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் தந்தையை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USIndianSentence #IndianKillingFather
  நியூயார்க்:

  அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் சைலேவில்லெ நகரில் வசித்து வருபவர் விஷால் ஷா(வயது 22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், இவரது தந்தை பிரதீப்குமார் ஷாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷால் ஷா கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷால் ஷாவை கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நியூ பிரன்ஸ்விக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

  மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தந்தையை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக விஷால் ஷாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

  முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் விஷாலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், 85 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்தபிறகே பரோல் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #USIndianSentence #IndianKillingFather
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி நிறுவனத்தின் மூலம் 405 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வாலிபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #usindian #cryptocurrencyscam
  நியூயார்க்:

  அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோக்ரப் சர்மா(27) தனது இரண்டு நண்பர்களுடன் இணைந்து கிரிப்டோகரன்சி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அந்த நிறுவனத்தின் மூலம் பல வாடிக்கையாளர்களை கிரிப்டோகரன்சி திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

  கிரிப்டோகரன்ஸி எனப்படுபவை முழுமையான டிஜிட்டல் கரன்ஸி. அவை டிஜிட்டலாக உருவாக்கப்பட்டு, டிஜிட்டலாகப் புழக்கத்தில் விடப்படுபவை. இது உலக அளவில் அதிகப் புழக்கத்தில் இருப்பது அமெரிக்காவில்தான். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 60 மில்லியன் டாலர்( இந்திய மதிப்புக்கு 405 கோடி ரூபாய்) முதலீடாக பெற்றுள்ளனர்.  இந்நிலையில், முறையான அனுமதியின்றி பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த டிஜிட்டல் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு 65 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. #usindian #cryptocurrencyscam
  ×