search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "sentenced"

  • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
  • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

  கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

  கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

  கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

  இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  • வாலிபர் கொலை வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
  • இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

  ஈரோடு:

  ஈரோடு ஆர்.என்.புதூர் மாதேஸ்வரன் நகரை சேர்ந்தவர் சித்துராஜ்(35). பழைய துணி வியாபாரி. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டார்.

  இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி அவர் வீட்டு அருகே உள்ள பொதுக் குழாயில் பெண்கள் சிலர் குடிநீர் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சித்துராஜ் குடத்தை நகர்த்தி விட்டு கை கால் கழுவியுள்ளார்.

  அப்போது தண்ணீர் பிடிக்க வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி பானுமதி (47), அவரது மகள் சிவரஞ்சனி (25), உறவினர்களான ராஜேந்திரன் மனைவி சித்ரா (33), லட்சுமணன் மனைவி கல்யாணி (55), முருகேசன் மனைவி சகுந்தலா (36) ஆகியோர் கண்டித்து வாக்குவாதம் செய்தனர்.

  அப்போது சிவரஞ்சினியின் கணவரான ரங்கநாதன் (29) அங்கு வந்தார். சித்துராஜிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த சித்துராஜ் தான் மறைத்து வைத்திருந்த சிறு கத்தியால் ரங்கநாதன் உடம்பில் குத்தி கிழித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 5 பெண்களும் விறகு கட்டையால் சித்துராஜை தாக்கினர்.

  மேலும் அவர் வைத்திருந்த கத்தியை பறித்து குத்தியதில் சித்துராஜ் இறந்தார். இது தொடர்பாக சித்தோடு போலீசார் 5 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் 2021 இல் கல்யாணி என்பவர் இறந்துவிட்டார்.

  இந்த வழக்கு விசாரணை ஈரோடு இரண்டாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். அதில் பானுமதி, சிவரஞ்சனி, சித்ரா, சகுந்தலா மற்றும் ரங்கநாதன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

  மேலும் தலா 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

  சிரியாவில் அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.
  பாக்தாத்:

  சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்களில் பலர் அண்டைநாடான ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

  இவர்களில் கடந்த பிப்ரவரி மாதம் சிரியாவால் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்ட சிலரில் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

  இந்த தீர்ப்புக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
  அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்திய பாதிரியார் ஒருவர் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
  நியூயார்க்:

  அமெரிக்காவில் தெற்கு டகோட்டா மாகாணத்தில் ரேபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரவீன் (வயது 38). இந்தியரான இவரது சொந்த ஊர் ஐதராபாத்.

  இவர் கடந்த ஆண்டு தனது தேவாலயத்தில் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

  இது தொடர்பாக ஜான் பிரவீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

  கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தண்டனைக்காக அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

  ஆனால் நீதிபதி ஸ்டீவன் மாண்டெல் அவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த 178 நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும். அவர் 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பரோலில் விடுதலை செய்யப்படலாம். அப்படி அவர் பரோலில் விடுவிக்கப்பட்டால், அவரை உள்நாட்டு பாதுகாப்புத்துறை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கோர்ட்டில் தனது குற்றத்துக்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
  உத்தரபிரதேசம் மாநிலம், ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றியபோது வெடித்த வன்முறையில் சுமார் 100 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #45accused #JawaharBaghviolence
  லக்னோ:

  உத்தரபிரதேசம் மாநிலம், மதுரா நகருக்கு அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில்  2-6-2016 அன்று சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற போலீசார் முயற்சித்த போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

  இந்த மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

  இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த சந்தன் போஸ், அவரது மனைவி பூனம் போஸ் மற்றும் இன்னொரு பெண்ணான ஷியாம்வதி ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

  மீதமுள்ள 45 பேருக்கு அவரவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கேற்ப அதிகபட்சமாக தலா மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். #45accused #JawaharBaghviolence
  அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt
  வாஷிங்டன்:

  இந்தியாவை சேர்ந்த பிரபு ராமமூர்த்தி, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் தற்காலிக விசாவில் வசித்து வருகின்றனர். ராமமூர்த்தி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் புராஜெக்ட் மானேஜராக வேலை பார்த்து வருகிறார்.

  பிரபு ராமமூர்த்தி கடந்த ஜனவரி மாதம் லாஸ் வேகாசில் இருந்து டெட்ராய்டுக்கு ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றபோது தனதருகில் இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த பெண், விமான ஊழியர்களிடம் புகார் செய்தார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் பிரபு  ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

  அவர் மீது டெட்ராய்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்த நிலையில், ராமமூர்த்தியை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதன்பின்னர் அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் நடைபெற்றது. இந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

  அப்போது, விமானத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தவேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். #IndianTechie #USCourt

  அண்ணனை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
  தாமரைக்குளம்:

  அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் முருகன்(வயது 38), சங்கர் (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகன் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சங்கர் மனைவியின் தம்பி சுரேசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்து தருவதாக சுரேஷிடம், முருகன் கூறியுள்ளார். இதில் முருகன், சங்கருக்கு இடையே கடந்த ஆண்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

  இதில் ஆத்திரமடைந்த சங்கர், முருகனின் நெற்றி பொட்டில் கையால் அடித்துள்ளார். இதையடுத்து முருகன் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்து முருகன் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து முருகன் மனைவி பொன்னரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் சங்கருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு எல்சல்வடார் முன்னாள் அதிபர் ஆன்டனியோ சாகாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. #ElSalvadorPresident #AntonioSaca
  சான்சல்வடார்:

  மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் நாட்டில் 2004-2009 ஆண்டுகளில் அதிபராக பதவி வகித்தவர், ஆன்டனியோ சாகா (வயது 53). இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறி செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.  இது தொடர்பாக அவர் மீது அங்கு உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தனது மகன் திருமணத்தின்போது 2016 அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின்போது, அவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கண்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தை மீறிய குற்றத்துக்காக 5 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது. மேலும் அந்த நாட்டு அரசுக்கு 260 மில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.1,872 கோடி) அவர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

  இந்த ஊழலில் சிக்கிய ஆன்டனியோ சாகா அரசு உயர் அதிகாரிகள் 6 பேருக்கு தலா 3 ஆண்டு முதல் 16 ஆண்டு வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.   #ElSalvadorPresident #AntonioSaca
  தாய்லாந்து நாட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் புத்த துறவிக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. #Thailand #WirapolSukphol
  பாங்காக்:

  தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர், வைராபான் சுக்பான் (வயது 39). முன்னாள் புத்த துறவி. இவர் அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமண வயது அடையாத ஒரு பெண்ணை கற்பழித்து, கர்ப்பம் ஆக்கினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார்.

  அவர் மீது போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் புத்தருக்கு உலகிலேயே மிகப்பெரிய மரகத சிலை செய்வதற்காக நன்கொடையாளர்களிடம் பெரும்தொகை திரட்டி ஏமாற்றினார்; வங்கிக்கணக்குகளில் 7 லட்சம் டாலர் (சுமார் ரூ.4¾ கோடி) குவித்து உள்ளார்; பல சொகுசு கார்களை வைத்து இருக்கிறார்; ஆடம்பர வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றெல்லாம் தெரிய வந்தது.

  அதைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவில் இருந்து தாய்லாந்து அரசு நாடு கடத்திக்கொண்டு வந்து விசாரணை நடத்தியது.

  இதில் அவர்மீது சட்ட விரோத பண பரிமாற்றம், மோசடி, ஆன்லைன் வழியாக நிதி திரட்டுவதற்காக கணினி குற்ற சட்டத்தை மீறியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

  வழக்கு விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய பாங்காக் கோர்ட்டு, அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

  மேலும் அவர்மீது புகார் கூறிய 29 நன்கொடையாளர்களுக்கு 8 லட்சத்து 61 ஆயிரத்து 700 டாலரை (சுமார் ரூ. 5 கோடியே 85 லட்சம்) திரும்பத்தர வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

  இவர் மீது தொடரப்பட்டு உள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  #Thailand #WirapolSukphol #tamilnews
  விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. #MaumoonAbdulGayoom
  மாலே:

  மாலத்தீவு முன்னாள் அதிபர் மம்மூன் அப்துல் கயூம். 80 வயதான இவர், 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய அதிபருமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது செல்போனை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை விதித்து, மாலத்தீவு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

  அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.