search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 years imprisonment"

    • மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
    • இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 1984 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது வங்கியில் நடந்த கூட்டுறவு வாரவிழா பதிவேடுகளை தணிக்கை செய்தபோது, ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 713 முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் வங்கி மேலாளர் ராமமூர்த்தி, வங்கி உதவி மேலாளர் ராமசாமி, முதுநிலை உதவியாளர் பெருமாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது.

    இந்த விசாரணையின் போது, கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 3 பேரையும் விடுவித்து 2013-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து போலீஸ் தரப்பில் 2014-ம் ஆண்டு மாவட்ட முதலாவது கூடுதல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    5 ஆண்டுகள் சிறை

    இதனிடையே வழக்கு தொடர்புடைய ராமமூர்த்தி, ராமசாமி ஆகியோர் அடுத்தடுத்து திடீரென இறந்து விட்டனர். இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை மாஜிஸ்திரேட்டு கேட்டதால் அதனை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட பெருமாளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு ஜெகநாதன் உத்தரவிட்டார்.

    கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடி வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார்.
    • நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே தேவியானந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன் (வயது 55) . கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் உளுந்தூ ர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிவு செய்து பரசுராமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    பரசுராமனின் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்ற த்தில் நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இதனை விசாரித்த நீதிபதி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பரசுராமனுக்கு 5-ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதனை அடுத்து அபராத தொகை 10,000 கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 4 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

    அண்ணனை அடித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள தேவனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்கள் முருகன்(வயது 38), சங்கர் (32). இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் முருகன் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், சங்கர் மனைவியின் தம்பி சுரேசின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் பழுது ஏற்பட்டது. இதனை சரி செய்து தருவதாக சுரேஷிடம், முருகன் கூறியுள்ளார். இதில் முருகன், சங்கருக்கு இடையே கடந்த ஆண்டு வாய்த்தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

    இதில் ஆத்திரமடைந்த சங்கர், முருகனின் நெற்றி பொட்டில் கையால் அடித்துள்ளார். இதையடுத்து முருகன் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் மயங்கி விழுந்து முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து முருகன் மனைவி பொன்னரசி அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஜெயக்குமார் சங்கருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து சங்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    ×