search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "25 years"

    • இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது
    • இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது

    பிரபல நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா கதாநாயகனாக ஏ.ஆர். ரகுமான் இசை கூட்டணியில் புதிய படத்தை முதன் முதலாக 'பிகைண்ட்வுட்ஸ்' சார்பில் மனோஜ் தயாரித்து, இயக்க உள்ளார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர் ரகுமான் இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைகின்றனர்.

    இப்படத்தில் இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து உள்ளன.

    காமெடி நடிகர் யோகி பாபு இதில் வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்."




     

    இன்னும் பெயரிட படாத இந்த படத்திற்கு சில மாதங்களில் தலைப்பு வெளியிடப்பட உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணையும் 6-வது கூட்டணியை குறிக்கும் வகையில் 'arrpd-6' என தற்காலிகமாக இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற 'மே' மாதம் தொடங்குகிறது. 2025 - ல் இப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    அமெரிக்காவில் தந்தையை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி வாலிபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #USIndianSentence #IndianKillingFather
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் சைலேவில்லெ நகரில் வசித்து வருபவர் விஷால் ஷா(வயது 22). இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவருக்கும், இவரது தந்தை பிரதீப்குமார் ஷாவுக்கும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, விஷால் ஷா கைத்துப்பாக்கியால் தந்தையை சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஷால் ஷாவை கைது செய்தனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நியூ பிரன்ஸ்விக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

    மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியபோது, ஷா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இரு தரப்பின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தந்தையை கொடூரமாக கொன்ற குற்றத்திற்காக விஷால் ஷாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் விஷாலுக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பதால், 85 சதவீத தண்டனைக் காலத்தை அனுபவித்தபிறகே பரோல் கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #USIndianSentence #IndianKillingFather
    ×