என் மலர்
நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸ் தொடர்"
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 114 ரன்கள் எடுத்தது.
- மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
ஜோகன்னஸ்பர்க்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. மோசமான வானிலை மற்றும் மழை காரணமாக 17 ஓவராகக் குறைக்கப்பட்டது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
ஷாய் ஹோப் 25 பந்தில் 48 ரன் எடுத்தார். ஹெட்மயர் 22 பந்தில் 48 ரன் குவித்தார்.
இதையடுத்து, டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 10 ஓவரில் 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. டி காக் 28 ரன்னும், ஜேசன் ஸ்மித் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது குடகேஷ் மோடிக்கும், தொடர் நாயகன் விருது டி காக்குக்கும் அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
- தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
செஞ்சூரியன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனின் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 42 பந்தில் 75 ரன்னும், ரூதர்போர்டு 24 பந்தில் 57 ரன்னும், பிராண்டன் கிங் 30 பந்தில் 49 ரன்னும் குவித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக, டி காக் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
டிகாக் 49 பந்தில் 10 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 36 பந்தில் 77 ரன்னும் குவித்தனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது டி காக்குக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது.
- தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பார்ல்:
தென் ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்தது. ஹெட்மயர் அதிகபட்சமாக 32 பந்தில் 48 ரன் ( 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ், கார்பின் போச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 17. 5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் மர்க்ராம் 47 பந்தில் 86 ரன் ( 9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் செஞ்சூரியனில் நாளை நடக்கிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 320 ரன்கள் சேர்த்தது.
- தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 4 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 320 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிராம் 96 ரன்னில் ஆட்டமிழந்தார். டோனி டி ஜார்ஜி 85 ரன்னில் அவுட்டானார். டீன் எல்கர் 42 ரன் எடுத்தார்.
வெஸ்ட்இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், குடகேஷ் மோட்டி, கைல் மேயர்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஹோல்டர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹோல்டர் 81 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜெரால்டு 3 விக்கெட்டும், ரபாடா, ஹார்மர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 4 ரன் எடுத்துள்ளது.
- முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- தொடர் நாயகனாக தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 251 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 321 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீசுக்கு 391 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 106 ரன்களில் சுருண்டது. இதனால் 284 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. அத்துடன், டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியது.
இன்று நிறைவடைந்த இரண்டாவது போட்டியின் ஆட்டநாயகனாக டெம்பா பவுமாவும், தொடர் நாயகனாக மார்க்ராமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 260 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 264 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கேப் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவரில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 72 ரன்னில் அவுட்டானார். நிகோலஸ் பூரன் 39 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜேன்சன், ஜிரால்டு கொயட்சி, பார்ச்சுன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக ஆடி 61 பந்தில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஜேன்சன் 43 ரன்னில் அவுட்டானார். 6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன், ஜேன்சன் ஜோடி103 ரன்கள் சேர்த்தது.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 29.3 ஓவரில் 264 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது கிளாசனுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது ஷாய் ஹோப், கிளாசன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஒருநாள் போட்டி தொடர் 1-1 என சமனிலையில் முடிந்துள்ளது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 220 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரொமாரியோ ஷெப்பர்ட் 22 பந்தில் 44 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரன் 19 பந்தில் 41 ரன்கள் குவித்தார்.
அதன்பின், 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடியது தென் ஆப்பிரிக்கா. ஹென்ரிக்ஸ் தனி ஆளாக போராடினார். அவர் 44 பந்தில் 83 ரன்கள் குவித்தார். ரூசோ 21 பந்தில் 42 ரன்கள் விளாசினார். மார்கிரம் 18 பந்தில் 35 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில். தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்து தோற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது அல்ஜாரி ஜோசபுக்கு அளிக்கப்பட்டது. தொடர் நாயகனாக ஜான்சன் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.






