search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viduthalai siruthaigal party"

    • சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
    • பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக விசிக தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்றத் தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது.

    அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல். திருமாவளவன் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    விளாத்திகுளம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையை கண்டித்து விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் கதிரேசன் மற்றும் பெஞ்சமின், பிராங்கிளின், மோட்சம், பிரபாவளவன், சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொண்டரணி வில்லாளன் ரெஸ்லின் வரவேற்று பேசினார். இதில் மணிப்பூர் மாநில அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி நகர செயலாளர் கருப்பசாமி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மனுவேல், தொழிலாளர் அணி அமைப்பாளர் பரமசிவம், விளாத்திகுளம் நகர செயலாளர் அழகு முனியசாமி, கணேசன், மகளிர் அணி சிவனம்மாள், முடியப்பராஜ், சேகர், சங்கர், பெரியசாமி, கதிரேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மோகன் நன்றி கூறினார்.

    ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

    ஆரணி:

    ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.

    ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து எரித்து தப்பிச்சென்று விட்டனர்.

    இன்று காலை கொடிக்கம்பம் எரிக்கபட்டிருப்பதை கண்ட விடுதலை சிறுத்தையினர் ஆரணி-பூசிமலைக்குப்பம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது எங்கள் கட்சிகொடியை சேதப்படுத்திய மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    காரைக்குடி,

    காரைக்குடி பெரியார் சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சினைக் கண்டித்தும், அதற்காக அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் சங்கு உதயகுமார் தலைமை தாங்கினார். மாநில தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இளையகவுதமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாநில துணை செயலாளர் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் தமிழேந்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் கணேசன், காரைக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் சேசு ராஜேந்திரன் உள்பட கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை மற்றும் சார்பு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற நிலையில் அவர்கள் திடீரென பஸ் மறியலுக்கு முயன்றனர்.

    அவர்களை போலீசார் தடுத்து அனுப்பி வைத்தனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனை சந்தித்து எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
    திருமாவளவனை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி இருந்தார்.

    இதை கண்டித்தும், அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதுவை - விழுப்புரம் சாலையில் மூலகுளத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு உழவர்கரை தொகுதி செயலாளர் தீந்தமிழன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அன்பரசன், விடுதலை வளவன், ஆற்றல் அரசு, அங்காளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    15 நிமிடத்திற்கும் மேலாக மறியல் செய்ததால் அப்பகுதியில் போக்கவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட சுமார் 45 பேரை கைது செய்தனர்.

    இதுபோல் தவளகுப்பம், புதுவை- கடலூர் சாலை 4 முனை சந்திப்பில் வி.சி.க. வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொகுதி செயலாளர் வெண்மணி தலைமை தாங்கினார். சுடர்வளவன், இன்பதமிழன், புரட்சி வளவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் அமுதவன், தமிழ்மாறன், தமிழ்வளவன், உள்ளிட்ட 150 பேர் இதில் கலந்து கொண்டனர்.

    சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீ சார் அப்புறப்படுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் அங்கிருந்த வர்களுக்கும் தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து தவளகுப்பம் போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இந்த திடீர் மறியலால் கடலூர்- புதுவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கோட்டக்குப்பம் பைபாஸ் ரவுண்டானா அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் விழுப்புரம் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தமிழ்மொழி தலைமை தாங்கினார்.

    தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை செயலாளர் பாவலன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

    திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய எச். ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கடலூர் ஒன்றியம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரை செல்வன் தலைமையில் ரெட்டிச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சம்பத், தொகுதி அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    கட்சியின் நிர்வாகிகள் முத்து, ஏழுமலை, ராஜ் குமார், காட்டு ராஜா, சத்திய ராஜ், திருநாவுக்கரசு, தலித் செவ்வேந்தன் உள்பட பலர் கலந்து கொண் டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று ரெட்டிச் சாவடி போலீஸ் நிலையத்தில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்தனர்.

    இதேபோல் மாவட்ட செயலாளர் முல்லை வேந் தன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் அண்ணா சிலை அருகில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பின்னர் கட்சி நிர்வாகிகள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த எச் ராஜா உருவபொம்மையை சாலைக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர். கண்டன கோ‌ஷம் எழுப்பினர். அங்கிருந்த நெல்லிக்குப்பம் போலீசார் எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அனைத்து எடுத்து சென்றனர்‌ பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். பின்னர் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அறந்தாங்கி: 

    அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை தங்கினார். கலைமுரசு முன்னிலை வகித்தார். திருமாறன் வரவேற்றார். 

    ஆர்ப்பாட்டத்தில் கஜா புயல் காற்றில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு முறையாக நிவாரணம் வழங்க வேண்டும். புயல் காற்றில் வீடு, ஆடு, மாடு இழந்த பொதுமக்களுக்கு நிவாரண மதிப்பை முறையாக எடுத்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். காற்றில் சேதம் அடைந்த மின்மாற்றி கம்பங்களை சரி செய்து உடனே மின்சார வசதி ஏற் படுத்தி கொடுத்து மின்சார கட்டணத்தில் விலக்கு அளித்து, பயிர் காப்பீடுகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

    இதில் திலீபன் ராஜா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெய்சங்கர் நன்றி கூறினார். 
    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய ஒன்றிய செயற்குழு கூட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் குரு தலைமையில் குள்ளஞ்சாவடியில் நடைபெற்றது.

    குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநில துணை செயலாளர் ஜான்சன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன் கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் புதியவன், ஒன்றிய பொருளாளர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய நிர்வாகிகள் வீரபாபு, வரதராஜன், இடிமுரசு, சேகர், கண்ணன், வேல் முருகன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற டிசம்பர் 10-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசம் காப்போம் மாநாட்டில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மாநாட்டில் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருத்தணியில் கம்யூனிஸ்டு-வி.சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அதனை அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட பொருளாளர் நேரு, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் தலித் மக்கள் முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 50 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதும் டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் ஒரு காரில் திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பஞ்சாட்சரம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஊட்டி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் மோகன்குமார், ஊட்டி சட்டமன்ற தொகுதி செயலாளர் கட்டாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். 

    தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி மலைப்பாதையில் நடந்த அரசு பஸ் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். ஊட்டி எச்.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி அல்லது நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், ஊட்டி நகர செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    பெரியகுளத்தில் திருமாவளவன் கைதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
    பெரியகுளம்:

    தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

    இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர், தன்னார்வ தொண்டர்கள் என பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை எழும்பூரில் துப்பாக்கி சூட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மறியல் போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து பெரியகுளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் நாகரத்தினம், பொருளாளர் ரபீக், நிர்வாகிகள் கனகராஜ், சுசிதமிழ்பாண்டி, மணிபாரதி, ஜோதிமுருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும். கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.#tamilnews
    கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்தார்.#Kamalhassan #thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

    குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.

    இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

    யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



    ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

    அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan #thirumavalavan
    ×