என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court order"

    • தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.
    • இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு 2018ம் ஆண்டு சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக சுபாரஷ்கரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.

    ஆனால், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.

    இதில், சுபாஷ்கரன் தரப்பில் ஆஜரானி வழக்கறிஞர், "இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்

    மேலும், "இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" எனக் கூறினர்

    அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும்" என மீண்டும் கோரினார்.

    ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம், எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் எதிரொலியாக, தீபாவளி அன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. #Diwali #Crackers #TNGovt #SC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூடுதல் நேரம் ஒதுக்க மறுத்துவிட்டது. 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.

    என்றாலும் பட்டாசு வெடிக்கும் 2 மணி நேரம் எது என்பதை தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    அதன்படி, தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது.

    இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக்கூடிய சரவெடி போன்ற பட்டாசுகள் வெடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதேபோல் பட்டாசு கடைகளில் அதிக புகை வரக்கூடிய மற்றும் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்கவும், பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பனை செய்வதை கண்காணிப்பது தொடர்பாகவும் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.



    அந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதையும், கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்வதையும் கண்காணிக்க தனி போலீஸ் படைகள் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்தந்த மாவட்டங்களில் இதுதொடர்பாக கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இதன்பேரில் தமிழகம் முழுவதும் சுமார் 500 கண்காணிப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோர்ட்டு உத்தரவை மீறி, பட்டாசு வெடித்தால் அது கோர்ட்டு அவமதிப்பு செயல் ஆகும்.

    இதற்கு இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வழிவகை உள்ளது.

    எனவே பொதுமக்களும், பட்டாசு வியாபாரிகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தமட்டில், நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும், கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசுகள் வெடிக்கும் பட்சத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வழக்கமாக தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே சென்னை மாநகரம் பட்டாசு வெடியால் கோலாகலமாக காணப்படும். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் உள்ளனர். #Diwali #Crackers #TNGovt #SC
    பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும்,உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மாளிகையில் குடியேற உள்ளார். #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தற்போது உள்ள அரசு பங்களாவிலிருந்து, தனக்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவிற்கு குடியேற உள்ளார்.
           
    உச்சநீதிமன்றம் முன்னாள் முதல்-மந்திரிகள் 6 பேர் அரசு மாளிகையிலிருந்து 15 நாட்களில் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் சென்ற வாரம் அனுப்பியிருந்தது. இதையடுத்து, மாயாவதி 2010-ம் ஆண்டில் வாங்கிய புதிய பங்களாவிற்கு மாற வேண்டும் என தனது கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் விரைவில் அங்கு குடியேற உள்ளார்.


    உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து முலாயம் சிங் யாதவ் உட்பட பல தலைவர்கள் தங்கள் அரசு இருப்பிடங்களை காலி செய்கின்றனர்.  #Mayawati
    ×