என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SriLankan Tamilans"

    • இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
    • இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.

    புதுடெல்லி:

    போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

    • தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.
    • இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

    பிறகு 2018ம் ஆண்டு சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கு எதிராக சுபாரஷ்கரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.

    ஆனால், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.

    இதில், சுபாஷ்கரன் தரப்பில் ஆஜரானி வழக்கறிஞர், "இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

    குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.

    அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்

    மேலும், "இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" எனக் கூறினர்

    அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும்" என மீண்டும் கோரினார்.

    ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம், எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா பயிற்சியினை நடத்தினார்.

    நெல்லை:

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அவற்றுள் ஒன்றாக இன்று அரசு அருங்காட்சி யகத்தில் நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரம் மற்றும் கங்கை கொண்டான் பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.

    இப்பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள பெண்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை பேட்டை பகுதியை சேர்ந்த பெனாசீர் பாத்திமா நடத்தினார்.

    நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தங்கேஸ்வரன், லோகேஸ்வரன், குணசீலி வாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×