என் மலர்
நீங்கள் தேடியது "ஆதவ் அர்ஜுனா"
- கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது
- ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட முன்னிறுத்தாத திமுக கட்சி, சிறுபான்மையினரின் காவலன் என்கிற முகமூடியை இனி பயன்படுத்த முடியாது.
விஜயின் தவெக ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறிய வாக்குறுதி குறித்து அமமுகவின் டிடிவி தினகரனும், தேமுதிகவின் பிரேமலதாவும் பாசிட்டிவ் ஆக பேசி இருந்தனர். இதனால் ஒருவரும் தவெகவுடன் கூட்டணி வைப்பார்களா என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் இன்றைய நிலையில் ஆண்ட கட்சியும் சரி, ஆளும் கட்சியும் சரி, தனித்து 40 சதவீத வாக்குகளை பெறும் நிலையில் இல்லை.
அக்கட்சித் தலைமையிலும் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களே தலைவர்களாக உள்ளார்கள். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளை வசப்படுத்தியே அதிகார பாதையில் அவர்கள் இதுவரை பயணித்துள்ளனர்.
இப்படி கூட்டணி கட்சிகளின் வாக்குகளை தங்கள் ஆட்சி அதிகாரத்திற்காக கபளீகரம் செய்யும் தந்திர அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது.
ஒரே குடும்பம், ஒரே கட்சி என்கிற அதிகார மமதையில் தங்களோடு கூட்டணிக்கு வரும் கட்சிகளை அடிமை சாசனம் எழுதி தரச் சொல்லும் திமுக தலைமைக்கு ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.
இதே திமுக தலைமைதான் 2024 தேர்தல் வெற்றிக்குப் பின் "221 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது, கூட்டணிக் கட்சிகள் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது" என்றெல்லாம் பெருமை பேசியது.
அவர்களின் கணக்குப் படி பார்த்தாலும் திமுக போட்டியிட்ட 22 (கொ.ம.தே.க உள்பட) தொகுதிகளில் சராசரியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகள் 132 தான்.
ஏனைய 102 இடங்களில் கூட்டணிக் கட்சிகள்தான் போட்டியிட்டன. காங்கிரசுக்கு 9 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 54 சட்டமன்ற தொகுதிகள், விசிகவுக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு பாராளுமன்ற தொகுதிகள் வீதம் 12 சட்டமன்ற தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள், மதிமுகவிற்கு ஒரு பாராளுமன்ற தொகுதி வீதம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் என்கிற விகிதத்தில் அப்போது பிரித்துகொடுத்த திமுக இப்போது சட்டமன்றத் தேர்தலில் மட்டும் இந்த பகிர்வை மறுப்பது ஏன்?
ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா?
இனி இங்கே அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது.
காரணம், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்கிற முழக்கம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இன்று அனைத்து கட்சித் தொண்டர்களின் குரலாகவும், மக்களின் குரலாகவும் மாறி இருக்கிறது. அந்தக் குரலை பிரதிபலிக்கிற சுயமரியாதைத் தலைவர்கள் உருவாகி விட்டார்கள்.
ஒடுக்கப்பட்ட, பின் தங்கிய சமூகங்களின் தலைவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளது. 'அதிகார பகிர்வு' என்பதையே அனைத்து கட்சிகளும் தங்களின் உரிமையாக முழங்கும் காலமும் கனிந்துள்ளது.
கூட்டணிக்கட்சிகளின் வாக்கு வங்கிகளை வைத்து ஆட்சிக்கு வந்து, அதிகாரத்திற்கு தாங்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்கிற மாயையை இன்றைய ஆளும்கட்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்த நியாயமான முழக்கத்தை எழுப்புபவர்களை வழக்கம்போல ஆர். எஸ். எஸ் என்றும் பாஜக என்றும் முத்திரை குத்தி திமுக தப்பித்து விட முடியாது.
கடந்த 2024 தேர்தலில் போட்டியிட்ட 22 தொகுதிகளில் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட முன்னிறுத்தாத திமுக கட்சி, சிறுபான்மையினரின் காவலன், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பாதுகாப்பு என்கிற முகமூடிகளை எல்லாம் இனி பயன்படுத்த முடியாது.
'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்' பங்கு என்கிற சுயமரியாதை முழக்கமே 2026- தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தின் முடிவுகளை தீர்மானிப்பதாய் இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.
- தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
- புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் நடந்த த.வெ.க. பொதுக்கூட்டத்தில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
இந்தியாவுக்கே புதுச்சேரி காவல்துறை முன்னுதாரணமாக இருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சருக்கு நன்றி. இப்படி மக்கள் பாதுகாப்பை தமிழகத்தில் எங்கும் கொடுத்தது கிடையாது.
தமிழக முதலமைச்சரே தில் இருந்தால் தேர்தலில் மோதுங்கள், எங்கள் பிரசாரத்தை முடக்காதீர்கள். காற்றை, வெள்ளத்தை நிறுத்த முடியுமா.? த.வெ.க. பிரசார பயணம் 72 நாளுக்கு பின் மீண்டும் இன்று முதல் தொடங்கிவிட்டது.
தலைவர் புதுச்சேரிக்கு ஏன் வருகிறார்? என கேட்கின்றனர். புதுச்சேரி மக்கள் நல்ல ஆட்சி, நல்ல கல்வி, நல்ல மருந்துவம், நல்ல போக்குவரத்துக்கு ஏங்குகின்றனர். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது தமிழகத்தை போல புதுச்சேரிக்கும் செய்ய வேண்டும் என யோசித்தார்.
தலைவர் விஜய் தமிழகத்துக்கு மட்டுமல்ல, புதுச்சேரிக்கும் என்ன செய்ய வேண்டும் என யோசனை செய்துள்ளார்.
விரைவில் புதுச்சேரி மாநில மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் பிரசார கூட்டத்தை நடத்துவோம்.
புதுச்சேரியில் மாற்றம் வருமா? வேலைவாய்ப்பு கிடைக்குமா? என ஏங்குகின்றனர். அந்த ஏக்கம்தான் இந்த கூட்டம். 1970-ல் உருவானது போல புதுச்சேரியிலும் நல்ல முதலமைச்சரை விஜய் உருவாக்குவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
- கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
புதுவை உப்பளம் மைதானத்தில் நடைபெறும் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக காவல்துறையை கைகளில் வைத்துள்ள முதல்வர் அவர்களே புதுச்சேரி காவல்துறையை பாருங்கள்.
* புதுச்சேரி காவல்துறை இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
* புதுச்சேரியில் கொடுத்துள்ளது போன்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
* காற்று, வெள்ளத்தை எப்படி நிறுத்த முடியாதோ அதைப்போலத்தான் த.வெ.க.வை நிறுத்த முடியாது.
* கூடிய விரைவில் மதுரை மாநாடு போன்று புதுச்சேரியிலும் மிகப்பெரிய அளவில் பிரசாரத்தை த.வெ.க. நடத்தும்.
* புதுச்சேரி வரலாற்றை புதிதாக எழுதப்போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
- அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.
பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது பேசிய தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:
* தேசிய கட்சிகள் தொடங்கி ஆளுங்கட்சி வரை செங்கோட்டையனை இழுக்க முயற்சி செய்தார்கள்.
* அண்ணன் செங்கோட்டையன் எடுத்த முடிவுகளில் முக்கியமான ஒரு முடிவு த.வெ.க.வில் இணைந்தது.
* த.வெ.க.வு.க்கு 20% வாக்குகள் தற்போதே உறுதியாகி விட்டது.
* எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதாவுடன் இணைந்து மாற்றம் கொண்டு வந்தவர் அண்ணன் செங்கோட்டையன்.
* வெற்றி, தோல்வி, பல இழப்புகளின் போதும் கட்சியுடன் துணைநின்ற அனுபவத்துடன் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது.
- நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய குடிமக்கள் சாதி, மதம், இனம், பாலினம் போன்ற எந்தவித பாகுபாடுகளுக்கும் இடமில்லாமல் 'அனைவரும் சமம்' என்று பிரகடனம் செய்த ஆவணம் அரசியலமைப்பு சட்டம். 'இந்திய மக்களாகிய நாம்' என்று தொடங்கும் அதன் முதல் வரி நமது ஒற்றுமை, அனைவருக்குமான பிரதிநிதித்துவம், கூட்டுறவு வாழ்க்கை போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற பொன்விதிகள் இந்தியத் திருநாட்டின் சிறப்பை பிரதிபலிக்கிறது.
இந்திய ஜனநாயகத்தின் ஆவணமாகவும், இந்தியர்களுடைய மதச்சார்பின்மையின் அடையாளமாகவும் உள்ள அரசியலமைப்பு சட்டத்தைக் காப்போம் என்று 'அரசியலமைப்பு தினமான' இன்று உறுதியேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
- ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
சென்னை:
வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு எதிராக சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வாக்குரிமையை தடுப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
நாம் நதி போல பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் அசிங்கமும் வரும் நல்லதும் வரும். நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நமது தலைவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட வேண்டும்.
நமது செயல்பாடுகள் மூலம் தி.மு.க.வினர் இன்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. ஏன் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரவில்லை. கிராமப்புறங்களில் காலையில் வேலைக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் இரவில் தான் வீடுகளுக்கு வருவார்கள். இதுபோன்ற நபர்களிடம் எப்படி விண்ணப்பங்களை கொடுத்து பூர்த்தி செய்வது என்கிற சிக்கல்கள் உள்ளன.
இது போன்ற அடிப்படை அறிவு இல்லாமலேயே எஸ்ஐஆர் பணிகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. நாம் இப்போது வைத்திருக்கும் வாக்காளர் அட்டை இனி செல்லுபடியாகாது. அது போன்ற சூழல் ஏற்படும்போது ஆதார் அட்டையும் செல்லுபடியாகாமல் போகலாம். பின்னர் இந்திய குடிமகனா என்று நம்மை பார்த்து கேள்வி எழுப்புவார்கள்.
ஒரு வருடத்திற்கு முன்பே இதனை தொடங்கி அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இன்று இந்தியாவிலேயே இந்த தலைவரும் செய்யாத செயலை நேற்று வெளியிட்ட எஸ்ஐஆர் தொடர்பான வீடியோ மூலமாக நமது தலைவர் விஜய் செய்து உள்ளார்.
நேற்று இரவு 12 மணிக்குள் மூன்று கோடி பேர் அதனை பார்த்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் செய்ய வேண்டிய வேலையை நமது தலைவர் செய்துள்ளார். எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோதும் அவரிடம் எந்த கட்டமைப்பும் இல்லை என்றார்கள். ஆனால் அவர் மக்கள் ஆதரவை பெற்று முதலமைச்சரானார்.
தற்போது நம்மை பார்த்தும் அதே குற்றச்சாட்டை கூறுகிறார்கள். ஆனால் நமது தலைவரோ மக்களையே கட்டமைப்பாக உருவாக்கி வைத்திருக்கிறார். இருப்பினும் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இளம் வாக்காளர்கள் முதல் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் நாம் அனைவருமே வீடு வீடாக செல்ல வேண்டும்.
இப்படி அனைவரது வாக்குரிமையையும் பெற்றுக் கொடுக்க வேண்டியது நமது கடமையாகும். இதனை நீங்கள் சரியாக செய்து விட்டாலே போதும் 2026 தேர்தலில் நமது தலைவர் தான் முதலமைச்சராக அமருவார்.
இவ்வாறு ஆதவ் அர்ஜுனா பேசினார்.
- தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு.
- பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா தேர்வு.
தமிழ்நாடு மாநில ஒலிம்பிக் சங்க தேர்தலில் தலைவராக ஐசரி கணேஷ், பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
- கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும்.
கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜூனா," கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும்" என்றார்.
இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் குடும்பங்களுடன் எங்கள் பயணம் எப்போதும் தொடரும். எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம்.
வாய்மையே வெல்லும்!
வாய்மையே வெல்லும்!
வாய்மையே வெல்லும்!
இவ்வாறு அவர் கூறினார்.
- சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
- நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் தி.மு.க. எம்.பி. வில்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அருணா ஜெகதீசன் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட் விமர்சனத்தை முன்வைக்கவில்லை.
* இரு மனுக்கள் மனுதாரர்களுக்கு தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* இரு மனுக்களும் போலி என தெரிய வந்தால் தற்போதைய உத்தரவு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
* சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
* கரூர் நெரிசல் வழக்கில் ஐகோர்ட்டுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகும்.
* நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* வாய்க்கு வந்ததை பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
- கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது.
* நீதித்துறை, போலீஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.
* பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
* கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.
* கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.
- த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உயரதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
* அரசு தரப்பு நியாயத்தை மட்டும் உள்துறை செயலர் பேசியது ஏன்?
* த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக ஐகோர்ட் கடுமையான வார்த்தைகளை கூறியது.
* விசாரணையே இல்லாமல் த.வெ.க. மீது தான் தவறு என்பது போல் ஐகோர்ட் உத்தரவிட்டது.
* எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.
* மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.
* த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். த.வெ.க.வை முடக்க முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?
- எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
* விஜய் தாமதமாக வந்தார் என்று குற்றம்சாட்டினர். காவல் துறை அனுமதித்த மதியம் 3 முதல் 10 வரைக்கு உள்ளாகத்தான் விஜய் வந்தார்.
* விஜய் தாமதமாக வந்தார் என்று கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு
* சம்பவ இடத்தில் கூட்ட நெரிசல் இருந்தது என்றால் கரூர் எல்லையில் விஜயை போலீசார் வரவேற்றது ஏன்?
* கூட்டத்தில் விஜய் வாகனம் நுழைந்தபோது ஒட்டுமொத்த காவல்துறை எங்கு நிறுத்த சொன்னதோ அங்கு நிறுத்திதான் பேசினார்.
* எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா? என்பதை அறிந்தபிறகே விஜய் பேசத் தொடங்கினார்.
இவ்வாறு அவர் கூறினார்.






