என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Assembly Elections"

    • தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
    • நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,  இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.

    மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.

    ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

    நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
    • தாராவி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம்.

    கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


    இதைத்தொடர்ந்து மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமதி ஜோதி கெய்க்வாட்டுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.


    இந்த நிலையில் விஜய்வசந்த் எம்பி, பிரசாரம் ஆரம்பிக்கும் முன்னர் அங்குள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.
    • அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் சத்ரபதி சம்பாஜி நகரில் பா.ஜ.க. சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்தத் தேர்தலில் ஒருபுறம் சம்பாஜி மகாராஜை நம்பும் தேசபக்தர்களும், மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.

    மஹாயுதி அரசாங்கம் இந்த நகரத்துக்கு சத்ரபதி சாம்பாஜி நகர் என்று பெயரிட்டது. உங்கள் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றினோம், பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றினோம்.

    மஹாயுதி அரசு உருவான பிறகு அதிகபட்ச அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. முதலீட்டால் மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க நமது அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு வளர்ச்சிக்கான திட்டங்களை அல்லாமல், பிரிவினையையே நம்பியுள்ளது.

    தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் முன்னோக்கிச் செல்வதை காங்கிரஸ் தடுக்கிறது. அதனாலேயே காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறது.

    காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) வெளிநாடுகளுக்குச் சென்று இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்.

    இதற்காக, தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தை சிறு சிறு சாதிகளாகப் பிரிக்க சதி செய்கின்றனர்.

    ஓபிசியை சாதி ரீதியாகப் பிரித்துவிட்டால் அதன் பலம் குறையும். அது நிகழ்ந்தால்தான் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என அக்கட்சி கருதுகிறது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு கிடைத்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை நிறுத்திவிடும். எனவே, அதற்கு பலியாகாமல் விழிப்புணர்வுடன் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.
    • பெண்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

    மும்பை:

    மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்க மாட்டார். அதனால் அவருக்கு அரசியலமைப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது.

    அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் இந்தியாவின் ஆன்மாவும், பிர்சா முண்டா, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி போன்ற தேசிய தலைவர்கள் முன்வைத்த கொள்கைகளும் அடங்கியுள்ளன.

    இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்கு தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார்.

    ராகுல் சிவப்பு புத்தகத்தைக் காண்பிப்பதாக மோடி பேசுகிறார். இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். அதைப் பாதுகாக்க நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

    மணிப்பூர் மாநிலம் ஒரு ஆண்டுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. அரசியலமைப்பை படித்திருந்தால் இப்படி நடந்துகொள்ள மாட்டார்.

    பழங்குடியினரை ஆதிவாசிகளுக்குப் பதிலாக வனவாசிகள் என்று குறிப்பிட்டு அவமதிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கூட்டணி தேர்தல் அறிக்கையின்படி பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.3,000 மாதாந்திர நிதி உதவி, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், ரூ.3 லட்சம் விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    • பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    உத்தரபிரதேசத்துக்கு அடுத்தப்படியாக அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதேப்போல் 81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபைத்தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இதன்படி 43 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 13-ந் தேதி நடந்தது. மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தேர்தலுடன் சேர்த்து மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று 2-வது கட்ட தேர்தல் தொடங்கியது.

    இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில், வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்குப்பதிவில் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மகாராஷ்டிரா வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் தேர்தலில் பங்கேற்று ஜனநாயகப் பண்டிகையின் சிறப்பை அதிகரிக்க வேண்டும். பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    ஜார்க்கண்ட் வாக்காளர்களும் அதிக பங்கேற்புடன் வாக்குப்பதிவு சாதனை படைக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிப்பவர்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம் என்றார். 

    • சிக்கிம் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது.
    • கேரளாவில் உள்ள 2 தொகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இடைத்தேர்தலோடு 14 மாநிலங்களில் உள்ள 48 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது. இதனால் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    உத்தரபிரதேசம் (9 தொகுதி), ராஜஸ்தான் (7), மேற்கு வங்காளம் (16), அசாம் (5), பீகார், பஞ்சாப் (தலா 4 இடம்) உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதில் பா.ஜ.க. 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்-6, சமாஜ்வாதி-22, ஆம் ஆத்மி-2, பகுஜன் சமாஜ்-1, ஐக்கிய ஜனதா தளம்-1, மத சார்பற்ற ஜனதா தளம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, அசாம் தன பரிஷத்-1, மற்றவை-6, சுயேட்சை-1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காசியாபாத், குண்டார்த்தி, தைர், புல்பூர், கதேரி, மஜாவன் ஆகிய தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோத்தளம் மிர்பூர் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

    சமாஜ்வாதி கட்சி 2 இடங்களில் (கர்ஹல், சிசா மாவு) வெற்றி முகத்துடன் இருக்கிறது.

    மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 6 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 இடங்களில் ஆளும் பா.ஜ.க. 16 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்தது.

    பஞ்சாபில் உள்ள 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

    பீகாரில் பா.ஜ.க.-1, ஐக்கிய ஜனதாதளம்-1, பகுஜன் சமாஜ்-1, இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

    அசாமில் பா.ஜ.க. 2 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அசாம் கனபரிஷத் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

    கேரளாவில் உள்ள 2 தொகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாலக்காடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ணகுமார் 464 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

    சேலக்கரை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னிலையில் இருக்கிறது.

    கர்நாடகாவில் 3 சட்டசபை தொகுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சண்டூர் தொகுதியில் காங்கிரஸ்-பா.ஜ.க. வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. 8-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 33 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    ஷிகான் தொகுதியில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. சென்ன பட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலை பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் விஜயப்பூர் தொகுதியில் பா.ஜ.க.வும், புத்தினி தொகுதியில் காங்கிரசும் முன்னிலை பெற்றது.

    குஜராத்தின் வி.ஏ.வி. தொகுதியில் காங்கிரசும், சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு ராய்ப்பூர் நகர் தொகுதியில் பா.ஜ.க.வும் முன்னிலையில் இருந்தன. மேகாலயா மாநிலம் காம்பேக்ரே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி சார்பில் முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார். மேலும் காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் குதித்தன.

    இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் மெஹ்தாப் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். மொத்தம் 4 சுற்றுகள் உள்ள நிலையில் 3 சுற்று முடிவில் மெஹ்தாப் 3817 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    உத்தரகாண்டின் கேதார்நாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார்.

    • காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.
    • எதிர்மறை அரசியலையும், வாரிசு அரசியலையும் மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:

    இன்று எதிர்மறை அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

    நிர்வாக திறனால் மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரசின் பொய்கள், வஞ்சகத்தை மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் நிராகரித்துள்ளது. காந்தி குடும்பம் பிரிவினைவாத விஷத்தைப் பரப்புகிறது.

    வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கான தீர்மானத்தை மகாராஷ்டிரா உறுதிப்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மற்றும் தே.ஜ.கூட்டணி தொண்டர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உ.பி., உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பா.ஜ.க.விற்கு வலிமையான ஆதரவை கொடுத்துள்ளன.

    அசாம் மக்கள் மீண்டும் ஒரு முறை பா.ஜ.க. மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

    ம.பி.யிலும் வெற்றி கிடைத்துள்ளது. பீகாரில் தே.ஜ.கூ.ட்டணிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இது நாடு வளர்ச்சியை மட்டும் விரும்புவதை காட்டுகிறது.

    மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுப்பது இது மூன்றாவது முறை. இது வரலாறு. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விட பா.ஜ.க. அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

    பா.ஜ.க.வின் நிர்வாக முறைக்கு கிடைத்த சான்றிதழ் ஆகும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.விற்கு கிடைத்த வெற்றி வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. அம்மாநிலத்தில் அனைத்து சாதனைகளையும் பா.ஜ.க. முறியடித்துள்ளது என தெரிவித்தார்.

    ×