search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East Bypoll"

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம்தேதி நடந்தது.
    • முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள்.

    முதலில் தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெறுகிறது.
    • அறையின் உள்ளேயும், வெளியேயும் என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ராஜாஜிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் இரவு 9.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 74.89 சதவீத வாக்குகள் தேர்தலில் பதிவாகி இருந்தது.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பாதுகாப்பான அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

    அறையின் உள்ளேயும், வெளியேயும், சுற்றுவட்டார பகுதி என 48 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர் என 450-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

    வாக்கு எண்ணிக்கை 16 மேஜைகளில் 15 சுற்றுகள் வரை எண்ணப்படுகிறது. தரைத்தளத்தில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் 6 மேஜைகள் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    தபால் வாக்கு பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று வரை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாளை காலை ஈரோடு மாநகராட்சியில் இருந்து தபால் ஓட்டு பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஒவ்வொரு மேஜைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை பணியினை மேற்கொள்வார்கள். ஒவ்வொரு மேஜையிலும் 77 வேட்பாளர்களின் முகவர்களும் இருப்பார்கள். இதனால் வேட்பாளர்களின் முகவர்களே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள்.

    முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் போலீசார் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • ஈரோடு கிழக்கில் 238 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பதற்றமான பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்களும், 25 திருநங்கைகளும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதையொட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இதில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளன. அங்கு துணை ராணுவத்தினர் ரோந்துப்பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும், வெப் கேமராக்களும் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு இன்று கொண்டு வரப்படும். அங்கு மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

    முன்னதாக, ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்பின் மின்னணு இயந்திரங்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    • ஈரோடு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
    • அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்), ஆனந்த் (தே.மு.தி.க.) உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தாலும் அவர்களைவிட தி.மு.க.வினர் தான் அதிகம் பேர் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மேயர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் நிர்வாகிகள், வட்ட பகுதி கழக செயலாளர்கள் என ஏராளமானோர் சென்று முகாமிட்டு கடந்த ஒரு மாதமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னணி பேச்சாளர்கள் பிரசாரம் செய்திருந்தனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

    இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து கார் மூலம் ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்கிறார்.

    காலை 9 மணி அளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து பிரசார வேனில் புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரிய வலசு, பாரதி தியேட்டர், சக்தி ரோடு பஸ்நிலையம், மெட்ராஸ் ஓட்டல், மஜீத் வீதி வழியாக சென்று சம்பத் நகர் பகுதியில் பிரசாரம் செய்கிறார். அதன் பிறகு கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக சென்று காந்தி சிலை அருகே பிரசார வேனை நிறுத்தி அங்கு திரண்டிருக்கும் மக்களிடையே பேசுகிறார்.

    இதன்பிறகு பூம்புகார் நகர், காந்திநகர், வல்லரசம்பட்டி வழியாக அக்ரஹாரம் சென்று பிரசாரம் செய்கிறார். அத்துடன் காலை பிரசாரத்தை முடித்துக் கொண்டு மதிய சாப்பாட்டுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மாலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மாலை 3 மணி அளவில் சம்பத் நகர், அம்மு மெஸ் பிரிவு, சின்னமுத்து வீதி வழியாக சென்று முனிசிபல் காலனி அருகே வேனில் இருந்தபடி பேசுகிறார். அதன்பிறகு மேட்டூர் ரோடு, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக சென்று பெரியார் நகரில் பிரசாரம் செய்து 'கை' சின்னத்துக்கு ஓட்டு கேட்கிறார். அத்துடன் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை முடித்துக்கொண்டு சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து பின்னர் சென்னை புறப்படுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்றும் ஈரோடு தொகுதியில் இறுதிக்கட்ட சூறாவளி பிரசாரம் செய்கிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் ஈரோட்டில் முகாமிடுவதால் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    வாக்குப்பதிவு 27-ம் தேதி நடைபெறுவதால் வெளியூரில் இருந்து பிரசாரத்துக்கு வந்தவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
    • கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.

    இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

    தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.

    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது.
    • இதில் 70-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. இதில் 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    வரும் 10-ம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று பிற்பகல் 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வேட்புமனுதாக்கல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் சுயேச்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ய குவிந்தனர்.

    • காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • சட்டசபை உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • இடைத்தேர்தலுக்கான பணிகளில் தங்கள் அணியினர் பம்பரமாக சுழன்று வேலை செய்கின்றனர்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவில்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். அதன்பின் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

    முன்னதாக, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருக்கிறது. ஒத்த கருத்துடையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும், அவர்களை எல்லாம், ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து, தமிழகத்தில் அந்த பணிகளை செய்திருக்கிறார்கள்.

    எங்களுடைய மேடைக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவருடைய இயக்கத்தின் ஆதரவு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும். ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது.

    ஈரோட்டில் எங்களுடைய தோழமை கட்சிகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஈரோட்டில் தேடி, தேடி பார்க்கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு ரொம்ப படிப்பினையைத் தந்திருக்கிறது என்று கருதுகிறேன். நாங்கள் களத்தில் மகத்தான வெற்றியை பெறுவோம். எங்கள் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறந்தவர். அவர் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    • உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம்.
    • விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார். உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம். தேமுதிக வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒட்டுமொத்த கழகத்தின் ஒப்புதலுடன் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்போம். தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    தற்போதைய சூழ்நிலையில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே 2021ல் எங்கள் கட்சி வென்ற தொகுதி.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் கேப்டனின் நல்ல நண்பர். அவரது புதல்வர் இன்று நம்மிடையே இல்லை.

    இடைத்தேர்தலை இவ்வளவு அவசரமாக அறிவித்ததில் எங்களுக்கு மனவருத்தம் உள்ளது. அவர் இறந்த சுவடே இன்னும் மறையவில்லை. அதற்குள் அடுத்து அங்கு வெற்றி பெறுவது யார்? என்ற பரபரப்பை கொண்டு வந்ததில் எங்களுக்கு மனவருத்தம். மனிதாபிமான அடிப்படையில் குறைந்தது 3 மாதம் கழித்து இடைத்தேர்தல் கொண்டு வந்திருக்கலாம். இப்போது தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அறிவித்தது அறிவித்ததுதான். எனவே, அரசியலில் இதையெல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும். எனவே, தேமுதிக தனியாக களம்காண்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலுக்காக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.

    முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ். அணியினர் கோரினர்.
    • இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவ்வகையில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று பிற்பகல் சந்தித்தனர்.

    இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ் அணியினர் கோரினர்.

    அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கமலாலயம் வந்து அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டிருக்கலாம் என தெரிகிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

    அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடந்த இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக பாஜகவின் நிலைப்பாட்டைப் பொருத்தே அடுத்தகட்ட நகர்வு இருக்கும். 

    • மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்க உள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கவேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால், மீண்டும் காங்கிரசுக்கே கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

    ×