search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி- சிவி சண்முகம் எம்.பி. பரபரப்பு புகார்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் குளறுபடி- சிவி சண்முகம் எம்.பி. பரபரப்பு புகார்

    • புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.

    டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.

    திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×