search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்குழுவை கூட்ட 5-ல் ஒரு பங்கு ஆதரவு போதும்- சி.வி.சண்முகம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பொதுக்குழுவை கூட்ட 5-ல் ஒரு பங்கு ஆதரவு போதும்- சி.வி.சண்முகம்

    • அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லும்.
    • உரிமை அனுமதி பெறாமலேயே ஓபிஎஸ் காரில் வந்து வைத்திலிங்கம் பொதுக்குழுவில் பங்கேற்றார்.

    ஒற்றை தலைமை விவ காரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அபோது அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தஞ்சை மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். முதலாவதாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

    2-வதாக இந்த பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை. கூலி யாட்களை வைத்து அடியாட்களை வைத்து நடத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார். 3-வதாக கழக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.

    4-வதாக இந்த பொதுக்குழுவில் கழக அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று கூறி இருக்கிறார்.

    கடைசியாக மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று விதி 19-ல் சொல்லப்பட்டு உள்ளது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப கூட்டலாம்.

    மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒருபங்கு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டாலே பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவையில்லை. 2,665 பொதுக்குழு உறுப் பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக் குழுவை கூட்ட முடியும்.

    மேலும் அவைத்தலை வராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதில் விதி மீறல் இருப்பதாக கூறி உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்துதான் அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.

    கழக அமைப்பு தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத் துக்கு முடிவு தான் தெரிவிக்க வேண்டும். அதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மேலும் அமைப்பு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்று விதி இல்லை. அவைத்தலைவர் பதவியை மட்டுமே பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு வில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங் களை நிறைவேற்றக் கூடாது என்று தான் கோர்ட்டு கூறியுள்ளது. நாங்கள் 23 தீர்மானங்களை நிராகரித்தது கோர்ட்டு அவமதிப்பு என்று அவர்கள் கூறி வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×