என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரசாயன கலவை"

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தர்பூசணி பழங்களில் ந்த ரசாயனமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சதீஷ்குமார் பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
    • தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

    நல்ல தர்பூசணிக்கும் ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறியிருப்பதாவது:-

    தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.

    சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாரம் பிரிக்கும் பணி தீவிரம்
    • பொங்கல் பண்டிகை முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்த சிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.தற்போது ரூ.1கோடி செலவில் திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று உள்ளது.

    இந்த பணி நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி ரசாயன கலவை பூசும் பணி முடிவடையும் வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 6-ந்தேதி முதல் இப்பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

    முதல்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்த 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்களில் படிந்திருந்த கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய் சுண்ணாம்பு பனைவெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவள்ளுவர்சிலையில் படிந்து உள்ள உப்பு தன்மையை உறிஞ்சி அகற்றும் தன்மை கொண்ட காகித கூழ் பூசும்பணி நடைபெற்றது. அதற்கு அடுத்த கட்டமாக சிலையில் மீண்டும் நல்ல தண்ணீர் பாய்ச்சி கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இறதி கட்டமாகரசாயன கலவை பூசும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் குழு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ஆய்வு செய்தனர். அப்போதுஅந்த குழுவினர் திருவள்ளூர் சிலையில் படிந்துள்ள உப்பு தன்மை முழுமையாக அகற்றப்பட்டு விட்டதா? என்று பரிசோதித்துப் பார்த்தனர். அதன் பிறகு திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசும்பணி நடந்து வந்தது. திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசம் பணி தற்போது நிறைவடைந்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து தற்போது 145அடி உயரத் துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரம் பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த சாரம் பிரிக்கும்பணி நிறைவடைந்தும்பொங்கல் பண்டிகை முதல்திருவள்ளு வர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் நேரில் சென்று பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    • ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.
    • நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளான பெங்களூர் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, முழு கொள்ளளவான 44.28 அடியில், நீர் இருப்பு 24.44 அடியாக உள்ளது.

    கடந்த சில மாதங்களாக கெலவரப்பள்ளி அணையில் ஷட்டர் மதகுகள் மற்றும் பராமரிப்பு காரணமாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அணையில் நீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இதனால் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 1,234 கனஅடி நீர் வந்தது. இன்றும் அதேஅளவு தண்ணீர் அணைக்கு வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 1,120 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனிடையே பெங்களூர் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் மற்றும் அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் அணைக்கு வரும் வரும் நீர், ரசாயன கலவையுடன் நுரையும் நுங்குமாக துர்நாற்றத்துடன் பொங்கி வருகிறது.

    அதேபோல அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும், நுரை பொங்கி செல்வதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுலா வளர்ச்சி கழக இயக்குனர் ஆய்வு
    • கடந்த 2000 ம் ஆண்டின் முதல் நாளன்று திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தின் அருகில் உள்ள கடல்பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    இந்தசிலை கடந்த 2000 ம் ஆண்டின் முதல்நாளன்று திறக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார். நான்குபக்கமும் கடல்சூழ்ந்துள்ள திருவள்ளுவர் சிலை உப்புகாற்றால் பாதிப்படைகிறது.

    மேலும் சிலைஅமைந்துள்ள மண்டபம், யானைசிற்பம், சிலையின் உட்பகுதி சுவரில் வடிவமைக்கப்பட்ட திருக்குறள் போன்றவை சேதமடையாமல் இருக்க 4ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசபடுவது வழக்கம்.

    கடந்த 2017- ம்ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. 4ஆண்டுகள் கடந்த நிலையில் சிலையை பராமரிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ரசாயன கலவை பூசுவதற்கு சுமார் 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கடந்த 6 -ந்தேதி பராமரிப்பு பணிகள் தொடங்கியது.இந்த பணிகள் நடப்பதால் சுமார் 6 மாதத்திற்கு சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையைபடகில்சென்று பார்வையிட தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

    இந்த நிலையில் ரசாயன கலவை பூசுவதற்காக சிலையை சுற்றிலும் நான்கு பக்கமும் இரும்பினாலான சாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி திருவள்ளுவர் சிலையில் ஆய்வு செய்து பணியினை நிர்ணையிக்கப்பட்டுள்ள காலத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    இந்த ஆய்வின் போது சுற்றுலா வளர்ச்சி கழகமண்டல மேலாளர் டேவிட்பிரபாகர், சுற்றுலா அதிகாரி சீதாராமன், ஓட்டல் தமிழ்நாடு மேலாளர் யுவராஜ், பொறியாளர் ஸ்ரீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×