search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food safety department"

    • நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
    • அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் அவ்வப்போது உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள், பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் என மொத்தம் 45 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் 5 கடைகளில் இருந்து 24 கிலோ சுகாதார மற்ற சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி மற்றும் பிற உணவு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுபோல் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும். ஓட்டல்களில் சுகாதாரமற்ற இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.
    • இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து உணவ கங்களி லும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட ஓட்ட ல்களில் ஆய்வு செய்தனர்.

    இதில், கடைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜில்) இருப்பு வைக்க ப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டி ருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3.5 கிலோவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.

    இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில்,

    மாவட்டம் முழுவதும் இதேபோன்று திடீர் ஆய்வு தொடரும். பொதுமக்கள் தரமில்லாத உணவு பண்டங்கள், பொருட்கள் கண்டறிந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மங்கலம் சாலை எஸ்.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள பேக்கரியில் வாலிபர் ஒருவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார். தண்ணீரில் குப்பை மற்றும் பாசி படிந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்தார்.

    அந்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கடையில் இருந்த பாட்டில்களை ஆய்வு செய்தார். அதில் தூசிகள் இருந்ததால் அந்த பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையில் உணவு பாதுகாப்பு துறை சான்றிதழ் பெறாமல் மேலும் பேக்கரி கடை நிறுவனத்திற்கான சான்றிதழை வைத்து கடையை நடத்தியது தெரியவந்தது.

    மேலும் ஆய்வு செய்யும் போது அழுகிய உருளைக்கிழங்கு, தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலையில் இருந்தது.இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்டுள்ளனர். மேலும் அந்த குடிநீர் பாட்டிலை பறிமுதல் செய்து பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    • தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் குத்துக்கல்வலசை பகுதியில் செயல்பட்டு வரும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் இயற்கைக்கு மாறாக அமில ஊசி செலுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்ப னை செய்யப்படு வதாகவும், இதை பொது மக்கள் உண்பதால் பல்வேறு உடல் உபா தைகள் ஏற்படுவ தாகவும் இணையதளம் மூலம் ஒருவர் உணவு பாது காப்புத்துறை அதிகாரிக்கு புகார் அளித்துள்ளார்.

    அதன் பேரில் தென்காசி ஊராட்சி ஒன்றிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி நாகசுப்பிரமணியம் தென்காசி-மதுரை நெடுஞ்சாலையின் ஓரமாக குத்துக்க ல்வலசை பகுதியில் செயல் பட்டு வரும் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் கடையில் திடீர் ஆய்வு நடத்தினார்.

    ஆய்வின் போது அந்த கடையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும் இயற்கைக்கு மாறாக செயற்கையான முறையில் அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்டது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அங்கு இருந்த சுமார் 100 கிலோ தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர்.

    தற்போது கோடை காலம் என்பதால் ஏராள மான பொதுமக்கள் தண்ணீர் சத்து மிகுந்த தர்பூசணி பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்பது வழக்கம். பொதுமக்கள் விரும்பி உண்ணும் இந்த தர்பூசணி பழங்களில் அமிலத்தை ஊசி மூலம் செலுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இயற்கைக்கு மாறாக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் அமிலம் செலுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    தாராபுரம் :

    ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க உணவுப்பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

    இன்றைய காலகட்டத்தில் பலர் ஆர்கானிக் எனும், இயற்கை உணவுப் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி இயற்கை உணவுப் பொருட்கள் என்ற பெயரில், போலியாக தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு உணவுப்பொருள் நிஜமாகவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதா என்பதை கண்டறிய தெரியாத வாடிக்கையாளர்களே, இது போன்ற நிறுவனங்களின் இலக்கு.

    பொதுமக்கள் மீது சுமத்தப்படும் இந்த மோசடி வியாபாரத்தை தடுக்க கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறை ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் ஆர்கானிக் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் அதற்கான முத்திரை, உணவுப்பாதுகாப்பு உரிமம் ஆகியவற்றை கவனித்து வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறையுடன் இணைந்து, 'ஆர்கானிக்' உணவுப் பொருட்களின் உற்பத்தி முறைகள், பரிசோதனை முறைகள், விற்பனை குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொதுமக்கள் ஆர்கானிக் பொருட்கள் வாங்கும் போது போலிகளை தவிர்க்க ஆர்கானிக் முத்திரை, உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு எண் லேபிளில் உள்ளதா என்பதை உறுதி செய்து பின்னரே வாங்க வேண்டும் என்றனர்.

    • மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
    • பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    பல்லடம் :

    தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தற்போது மார்ச் மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரி த்துள்ளது. இதன்படி பல்லடம் பகுதியிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், இளநீர்,ஜூஸ், மோர் போன்றவற்றை குடித்து தாகம் தணிக்கின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ள ஜூஸ் கடைகளில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்வோர் உபயோகிக்கும் ஐஸ்கட்டிகள் தரமாக இருக்க வேண்டும். அதிக மான வண்ணங்களை குளிர்பா னத்தில் சேர்க்க க்கூடாது, குளிர்பா னம் தயாரிக்கும் இடம் சுத்த மாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். குளி ர்பான தயாரிப்பு பணியா ளர்கள் சுகாதா ரமான முறையில் இருக்க வேண்டும்.

    பழச்சாறு விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை பயன்படுத்தி, அதற்கு தேவையான தண்ணீர், பால், போன்ற பொரு ட்களும் தரமாக இருக்க வேண்டும். பூச்சி, ஈக்கள் புகார் வண்ணம் தடுப்பு வசதிகள் செய்து இருக்க வேண்டும் என அறி வுறுத்தி னார்.

    • பல்லடம் பகுதியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது
    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது

    பல்லடம் 

    பல்லடம் பகுதியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயலலிதாம்பிகை தலைமையில் பல்லடம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன்,தலைமையிலான போலீசார் பல்லடம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடுகபாளையத்தில் உள்ள குளிர்பான விற்பனை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்கடையில் இருந்து 6 கிலோ 210 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அதே போல் உடுமலை சாலையில் உள்ள தள்ளுவண்டி கடையில் 160 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாணிக்காபுரம் பகுதியில் உள்ள மளிகை கடையில் 4 கிலோ 300 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மொத்தம் 3 கடைகளில் 10கிலோ 510 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று பல்லடம் பகுதியில் திடீர் சோதனை நடத்தப்படும் என்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் அது பற்றி 94440 42322 என்ற அலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர்களின் பெயர் விபரம் ரகசியம் காக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

    • கம்பத்தில் சாலையோர பானிபூரி மற்றும் சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்த பட்டது.
    • கெட்டுப்போன மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட இறைச்சி மற்றும் காளான், காளிபிளவர் உள்ளிட்டவைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உத்தரவின்படி கம்பத்தில் வ.உ.சி திடல்,மெயின்ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு,பார்க்ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலையோர பானிபூரி மற்றும் சிக்கன் கடைகளில் திடீர் ஆய்வு நடத்த பட்டது.

    உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சரண்யா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் கெட்டுப்போன மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட இறைச்சி மற்றும் காளான், காளிபிளவர் உள்ளிட்டவைகள் சுமார் 20 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

    இதேபோல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது குறித்து கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் கூறுகையில், கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டல் உரிமையாளர்கள், சாலையோர உணவு கடை விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

    உணவில் கலப்படம், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் உணவு பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவித்தார்.

    • அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
    • 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் செயல்படும் அசைவ ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அசைவஓட்டல்களில் சேமித்து வைக்கப்படும் குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? காலாவதியான உணவு பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குளிர்சாதன பெட்டியில் சமைத்த அசைவ உணவு 9 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சமைத்த சுண்டல் மற்றும் சன்னா 3 கிலோ தகாத முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது பறிமுதல் செய்யப்பட்டது. மற்றும் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிக்கன் 22 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காலாவதியான காளான் பாக்கெட்டுகள் 4 கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல் பேக்கரிகளில் உணவு பொருட்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டது.

    • உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரி உள்ளிட்டோர் கம்பத்தில் உள்ள மீன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 25 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஓடைக்கரை தெரு, வ.உ.சி திடல் பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன் வளர்ச்சி துறை அதிகாரி உள்ளிட்டோர் கம்பத்தில் உள்ள மீன் கடைகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மணிமாறன், மதன்குமார், சுரேஷ்குமார் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ராஜா ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

    அப்போது கம்பம் ஓடைக்கரை தெரு பகுதியில் உள்ள மீன் கடைகளில் சென்று ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுகிறதா எனவும், கெட்டுப்போன மீன்கள் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

    ஓடைக்கரை தெருவில் உள்ள5-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு நடைபெற்றது .அப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 25 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்து இந்த மீன் விற்பனையில் ஈடுபட்ட கடைக்காரர்களை இது போன்ற விற்பனையில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் பினாயில் ஊற்றி முற்றிலுமாக அளிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று நடைபெற்ற இந்த திடீர் ஆய்வானது வெறும் கண்துடைப்பாக நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கம்பம் நகரில் பல்வேறு பகுதிகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா பகுதியில் இருந்து மீன்கள் கொண்டுவரப்பட்டு வீதி வீதியாக சென்று விற்பனையும் நடைபெறுகிறது.

    இவ்வாறு நடைபெறும் விற்பனையில் ஏராளமான கெட்டுப்போன மீன்களே அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது போன்ற மீன் கடைகள் மற்றும் தெருக்களில் வாகனங்களில் விற்பனை செய்யும் மீன் வண்டிகளையும் சோதனை மேற்கொள்ளவில்லை. ஆகவே இந்த சோதனையானது வெறும் கண்துடைப்பாகவே நடைபெற்றது என குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் கம்பம் நகரில் ஏராளமான ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி கடைகள் உள்ளது. இந்த கடைகளிலும் பதப்படுத்தப்பட்ட பழைய இறைச்சிகளை விற்பனை செய்வதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.முதல் நாள் இறைச்சியினை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் விற்பனை செய்கின்றனர். இது போன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளின் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எந்த ஒரு சோதனையும் மேற்கொள்வதில்லை எனவே தேனி மாவட்ட கலெக்டர் இதனை கவனத்தில் கொண்டு இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமும் மட்டுமல்லாது ஆடி முதல் நாள் என்பதால் கம்பம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் இறைச்சிகள் வாங்க குவிந்தது குறிப்பிடத்தக்கது.

    • தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது.

    அதன்பேரில் தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ராகவன் தலைமையில் போடி வட்டார உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சரண்யா அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    போடி மீனாட்சிபுரம், சிலமரத்துப்பட்டி, மீனாவிலக்கு ஆகிய பகுதிகளில் புகையிலை விற்ற 7 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    கூடலூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் கலப்பட தேயிலைத்தூள் தயாரிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறை குழுவினர் கூடலூர் பகுதிக்கு நேற்று மாலை வந்தனர்.

    பின்னர் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி கம்மாத்தியில் செயல்படும் ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு நடத்தினர். அப்போது உரிமம் புதுப்பிக்காமல் தொழிற்சாலையை நடத்தி வருவது தெரியவந்தது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். அதில் உரிமம் புதுப்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து தொழிற்சாலையில் இருந்து தேயிலைத்தூள் மாதிரியை பரிசோதனைக்காக சேகரித்து கொண்டனர். அதன்பிறகு உணவு பாதுகாப்பு துறையினர் கூறியதாவது:-

    மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் தனியார் தேயிலை தொழிற்சாலையில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உரிமம் புதுப்பிக்காமல் தொழிற்சாலை இயங்குவது தெரியவந்தது. மேலும் குறைந்த அளவு பச்சை தேயிலையை வைத்து தேயிலைத்தூள் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் மாதிரி பரிசோதனைக்காக சிறிது தேயிலைத்தூளை சேகரித்து வைத்துள்ளோம். இதன் பரிசோதனை அறிக்கை விவரம் கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மண்வயல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சி.கே.மணி கூறியதாவது:-

    இந்த பகுதி விவசாயிகள் யாரிடமும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் பச்சை தேயிலை கொள்முதல் செய்யவில்லை. எனவே விவசாயிகள் விவரமும் தொழிற்சாலையில் கிடையாது. மேலும் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. உரிமத்தை புதுப்பிக்காமல் தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இப்பகுதி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×