உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டல்களில் ஆய்வு செய்தனர்.இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை
Published on

ஈரோடு:

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து உணவ கங்களி லும் தேங்காய் சட்னி, தயிர், மோர் வகைகள், ஷவர்மா உள்ளிட்ட உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15-க்கும் மேற்பட்ட ஓட்ட ல்களில் ஆய்வு செய்தனர்.

இதில், கடைகளில் உள்ள குளிர்பதன பெட்டியில் (பிரிட்ஜில்) இருப்பு வைக்க ப்பட்டிருந்த 12 லிட்டர் தேங்காய் சட்னி, சமைத்த நிலையில் வைக்கப்பட்டி ருந்த ஷவர்மா இறைச்சி வகைகள் 3.5 கிலோவை பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு, தரங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவைகள் உடனடியாக அழிக்கப்பட்டன.

இது தொடர்பாக 3 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் கூறுகையில்,

மாவட்டம் முழுவதும் இதேபோன்று திடீர் ஆய்வு தொடரும். பொதுமக்கள் தரமில்லாத உணவு பண்டங்கள், பொருட்கள் கண்டறிந்தால் உடனடியாக 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com