search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "raid"

    • அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பரிசுபொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை இளைய தெருவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வ.உ.சி. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வைத்திருந்த பையில் கட்டுகட்டாக ரூ.15 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. ஆனால் அவரிடம் பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதையடுத்து ரூ.15 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    குபேந்திரன் பழைய வண்ணா ரப்பேட்டையில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். அவர் சொந்தமாக இடம் வாங்கு வதற்காக சேமித்து வைத்த பணத்தை எடுத்து வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் பணத்திற்கான ஆவணத்தை காட்டி பெற்றுக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதனால் குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.15 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    ஊட்டி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனை மேற்கொண்டு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

    கூடலூரில் உள்ள மரப்பாலம் சோதனைச்சாவடியில் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கேரள பதிவெண் கொண்ட லாரிகள் வந்தது.

    அதிகாரிகள் அந்த லாரிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 லாரிகளிலும் ரூ.11.80 லட்சம் பணம் இருந்தது. அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • கோட்டூர்புரம், அண்ணாநகர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை.
    • கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனை.

    சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    கட்டுமானம் மற்றும் கெமிக்கல் நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை கோட்டூர்புரத்தில் விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இதேபோல், தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்திலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் இன்று அதிகாலை முதல் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    • சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் 10 மாவட்டங்களில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா போலீார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக பொறியாளர் அனுமந்தராயப்பா, பொதுப்பணித்துறை மாண்டியா கோட்ட பொறியாளர் ஹர்ஷா, சிக்மகளூர் வணிகவரி அலுவலர் நேத்ராவதி, ஹாசன், உணவு ஆய்வாளர் ஜெகநாத் ஜி கொப்பல், வனத்துறை அலுவலர் ரேணுகாமா, சாம்ராஜ்நகர் ஊரக குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் ரவி, மைசூர் நகர்ப்புற வளர்ச்சி ஆணை அலுவலர் யக்ஞேனந்திரா, பெல்லாரி உதவி பேராசிரியர் ரவி, விஜயநகர மாவட்ட எரிசக்தி துறை அதிகாரி பாஸ்கர், மங்களூரு மெஸ்தாம் அதிகாரி சாந்தகுமார் ஆகியோருக்கு தொடர்புடைய 40 இடங்களில் இந்த சோதனை நடந்துவருகிறது என லோக் ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.

    குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், பினாமிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், பண்ணை வீடுகள், வணிக வளாகங்களில் இந்த அதிரடி சோதனை நடந்து வருகிறது.

    லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் நடத்தி வரும் சோதனையால் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சோதனை நடந்து வரும் இடங்களுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
    • நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது.

    கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில் இங்குள்ள ஒரு விமானத்தில் மற்றும் விமான நிலையத்தின் உள்ளே வெடிபொருட்கள் உள்ளது. அவை சில மணி நேரங்களில் வெடித்துவிடும். நான் உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவேன் என்றும், நாங்கள் பன்னிங் (வேடிக்கை) என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மின்னஞ்சலை கவனித்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக நகர போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதைதொடர்ந்து மங்களூரு நகர போலீசார் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வெளியே கூடுதல் செக்போஸ்ட்கள் வைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

    நாசவேலை தடுப்பு சோதனை மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படை சோதனையும் நடத்தப்பட்டது. மேலும் இன்ஸ்பெக்டர் பாஜ்பே தலைமையில் விமான நிலைய அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டமும் நடைபெற்றது. மேலும் விமான நிலைய அதிகாரிகளின் புகாரின் பேரில் உள்ளூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்பியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்
    • இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கரூர்

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். அந்த வகையில் கரூரில் அமைச்சர் அந்த அமைச்சருக்கு தொடர்புடையதாக கருதப்படும் கரூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மா வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அனெக்ஸ் சுரேஷ் என்பவரின் நிதி நிறுவனம், மகாத்மா காந்தி சாலையில் உள்ள அவரது வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் சக்திவேல் வீடு ஆகிய 4 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பின்னர் நேற்று மீண்டும் மேற்கண்ட 4 இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. தொடர்ச்சியாக

    இன்று(ஞாயிற்றுக்கிழமை)3வது நாளாக பத்மா,சுரேஷ்,சக்திவேல் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்த சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

    • திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • . தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் கடந்த2006-2011 ஆம் ஆண்டில் தி.மு.க. கவுன்சிலராக இருந்தவர் தொழில் அதிபர் சக்திவேல். இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் காலை7.30 மணி அளவில் திடீரென 3 கார்களில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திருச்சியில் இருந்து வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய 3 மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 7 மணி வரை சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வை முடித்து விட்டு புறப்பட்டனர்.

    நள்ளிரவு 2 மணி அளவில் 3-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சக்திவேலின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.பகல் 11.30 மணியளவில் வெளியில் சென்ற அதிகாரிகள் பகல் 12.30 மணி அளவில் மீண்டும் சோதனை மற்றும் விசாரணை நடத்தினர் .

    நேற்று நள்ளிரவு வரை சோதனை நீடித்தது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.


    இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.


    நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

    • தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
    • 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருச்சி

    தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் குவாரி ஓப்பந்ததாரர் உள்ளிட்ட சில மணல் மாபியாக்களை சுற்றி வளைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் தாளக்குடி நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கன்களை விட அதிகமான லாரிகளுக்கு மணல் விற்பனை செய்வதாகவும் 10 அடி ஆழத்துக்கு மேல் மணல் அள்ளுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்த மணல் குவாரிகளில் கடந்த மாதம் 12ம் தேதி 3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். பல முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் கடந்த சில நாட்களூக்கு முன்பு மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குவாரிகளில் இன்று அமலாக்க துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் என 10 பேர் பாதுகாப்பு படை வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உதவியுடன் மிதவை படகுடன் கூடிய ஆழம் கண்டறியும் கருவியுடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
    • அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நொய்யல்

    தமிழக பொதுப் பணித்துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவரது வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 80 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    அந்த வகையில் கரூரிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புஞ்சை தோட்டக்குறிச்சியில் தி.மு.க. பிரமுகரான முன்னாள் கவுன்சிலர் சக்திவேல் வீட்டிலும் வருமானவரித்துறையினர் இரவு வரை சோதனை நடத்தினர்.

    3 கார்களில் காலை 7.30 மணிக்கு வந்த அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதே போல் கரூர் மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை இரவும் நீடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
    • இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.


    மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
    • இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.



    மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


    இந்நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.




    ×