என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை
    X

    கர்நாடகாவில் 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை

    • கர்நாடகாவில் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வீடு, அலுவலகத்தில் லோக் ஆயுக்தா சோதனை நடத்தி வருகிறது.
    • வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் நிர்மிதி கேந்திரா திட்ட இயக்குனர் கங்காதர் ஷிரோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் லோக் ஆயுக்தா போலீஸ் சூப்பிரண்டு ஹனுந்தராய தலைமையிலான போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சோதனையில் ஏராளமான தங்க நகைகள், வெள்ளி நகைகள், மற்றும் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×