search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
    X

    சேலத்தில் போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

    • வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.
    • ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    சேலம்:

    சென்னை அம்பத்தூர் லேடான் தெருவில் ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் கடந்த ஓராண்டாக வங்கி ஒன்று இயங்கி வந்தது. இந்த வங்கியின் கிளைகள் மதுரை, விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்பட 8 இடங்களில் இயங்கியது.

    இந்த வங்கியின் தலைவராக சந்திரபோஸ் என்பவர் செயல்பட்டார். அவர் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் கொடுத்தது போன்று போலி சான்றிதழ் தயாரித்து இந்த வங்கியை தொடங்கியுள்ளார்.

    இதையடுத்து அந்த போலி கூட்டுறவு வங்கியில் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சேலத்தில் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே ஊரக வேளாண் விவசாயிகள் கூட்டுறவு சங்க லிமிடெட்டின் என்ற பெயரில் கிளை வங்கி செயல்பட்டது தெரியவந்தது. இங்கு கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் அதிகாரிகள், நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சோதனை நடத்தினர்.

    அப்போது வங்கி மேலாளர் விமல்ராஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

    Next Story
    ×