திருப்பூர் ஜவுளிக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
திருப்பூரில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுவனத்தை படத்தில் காணலாம்.
திருப்பூரில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளி நிறுவனத்தை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.

சிவா டெக்ஸ்டைல்ஸ்

இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com