search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபர் மசூதி இடிப்புதினத்தையொட்டி  திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை
    X

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த போலீசார். 

    பாபர் மசூதி இடிப்புதினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர்:

    டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூரில் இன்று பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த உடைமைகளை போலீசார் தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளை கொண்டு உடைமைகளை சோதனை செய்யப்பட்டது.

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 22 ரோந்து வாகனங்களில் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    Next Story
    ×